அதிரடி... அட்டகாசம் பண்ணும் பீஸ்ட் படம்... விஜய்க்கு பாட்டெழுதும் சிவகார்த்திகேயன்
சென்னை : தளபதி விஜய்யோட பீஸ்ட் படத்தின் சூட்டிங் இரவு, பகல் பாராமல் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
படத்தின் இசையை அனிருத் கவனித்துவரும் நிலையில் பாடல்கள் மிகவும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பீஸ்ட் படத்தின் முதல் பாடலுக்கான வரிகளை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பரபரப்பான சூட்டிங்
தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தின் சூட்டிங் சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நாயகி பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். முதலில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர்கள் கடந்த மாதத்தில் விஜய் பிறந்தநாளையொட்டி வெளியான நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

சிறப்பான பாடல்கள் எதிர்பார்ப்பு
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் படத்தின் சூட்டிங் ஜரூராக நடைபெற்று வருகிறது. படத்தின் இசையமைப்பை அனிருத் மேற்கொண்டுள்ளார். விஜய் படத்தின் பாடல்கள் எப்போதுமே சிறப்பாக அமையும். அந்த வகையில் இந்த படத்தின் பாடல்களும் மிகவும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

சிவகார்த்திகேயன் எழுத்து
இந்நிலையில் தளபதி விஜய்யின் இந்த படத்தின் முதல் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதவுள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மேக்கிங் வீடியோவும் நெல்சன் மற்றும் அனிருத் இடையில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Recommended Video

வரவேற்பை பெற்ற மேக்கிங் வீடியோ
முன்னதாக டாக்டர் படத்தின் பாடலிலும் அனிருத், சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகியோர் இணைந்து மேக்கிங் வீடியோவில் சிறப்பான நகைச்சுவையுடன் கொண்டு சென்றிருந்தனர். இந்த வீடியோ ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது பீஸ்ட் படத்தின் பாடலுக்கும் சிறப்பான மேக்கிங் வீடியோவை இவர்கள் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











