சிவகார்த்திகேயன் முதல் ரஜினி வரை காப்பாத்தல.. ஜெயம் ரவியாவது இந்த வாரம் கலெக்‌ஷன் அள்ளுவாரா?

சென்னை: கடந்தாண்டு கோலிவுட் சினிமாவுக்கு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வசூல் மழை கொட்டி வந்தது. 600 கோடி ரூபாய் தான் இனிமேல் அடிப்படை பாக்ஸ் ஆபிஸ் என்றெல்லாம் தயாரிப்பாளர்கள் சந்தோசத்தில் குதிக்க ஆரம்பித்தனர். ஆனால் அதெல்லாம் அப்படியே தலைகீழாக இந்த ஆண்டு மாறியுள்ளது.

பொங்கலுக்கு வெளியான சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்கள் எதுவுமே 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸை எட்டவில்லை. அதைப்போல கடந்த வாரம் வெளியான ரஜினிகாந்தின் லாஸ் எல்லாம் திரைப்படமும் வசூலில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.

வாரிசு முதல் லியோ வரை: தமிழ் சினிமாவுக்கு 2023-ம் ஆண்டு மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஆண்டாக மாறியிருந்தது. ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு என இரு படங்களும் 300 கோடி மற்றும் 200 கோடி வசூலை ஈட்டி அதிகபட்சமாக 500 கோடி ரூபாய் வசூலை முதல் மாதத்திலேயே பாக்ஸ் ஆபீஸில் ஏற்றியது.

அதன் பின்னர், வெளியான பல திரைப்படங்கள் ஐம்பது கோடி ரூபாய் வசூலுக்கு மேல் அள்ளியது. விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய நிலையில், ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் மற்றும் விஜய் நடித்த லியோ திரைப்படம் தலா 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸை கடந்த ஆண்டு உச்சத்துக்கு கொண்டு சென்றனர்.

Sivakarthikeyan to Rajinikanth failed, Will Jayam Ravi save Kollywood at Box Office?

சொதப்பிய சிவகார்த்திகேயன், தனுஷ்: இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான தனுஷின் கேப்டன் மில்லர் 90 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் ஈட்டியதாகவும் சிவகார்த்திகேயன் அயலான் திரைப்படம் 80 கோடி வசூலை குவித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் படத்திற்கு செலவு செய்யப்பட்ட பட்ஜெட் தொகைக்கு குறைவாகவே வசூல் வந்ததாகவும் இரண்டு படங்களும் வெற்றிப் பெறவில்லை என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அருண் விஜயின் மிஷின் சேப்டர் 1 மற்றும் விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் உள்ளிட்ட படங்களும் பெரிதாக வசூல் ஈட்டவில்லை.

Sivakarthikeyan to Rajinikanth failed, Will Jayam Ravi save Kollywood at Box Office?

ரஜினிகாந்தும் காப்பாத்தல: அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார், ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன், சந்தானம் நடிப்பில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட படங்களும் பெரிதாக வசூலை அள்ளவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் வெளியான ரஜினிகாந்தின் லால் சலாம் திரைப்படம் வசூல் வேட்டை நடத்தும் மீண்டும் தியேட்டர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோல்தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் தான் ஹீரோக்களாக நடித்துள்ளனர் என்கிற புரோமோஷன் படத்திற்கு எதிர்வினை ஆற்றி விட்டதாகவும் அதன் காரணமாகவே வசூல் அடிவாங்கி இருப்பதாகவும் கூறுகின்றனர்.

Sivakarthikeyan to Rajinikanth failed, Will Jayam Ravi save Kollywood at Box Office?

ஜெயம் ரவி காப்பாற்றுவாரா?: இந்நிலையில் இந்த வாரம் பிப்ரவரி 16-ஆம் தேதி ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகியுள்ள சைரன் 108 திரைப்படம் வெளியாகிறது. கடந்தாண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் 350 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. ஆனால் அது மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டார் படமாக வெளியாகி இருந்தது. ஜெயம் ரவி சோலோ ஹீரோவாக நடித்த அகிலன் மற்றும் இறைவன் உள்ளிட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்தன. அதனால், சைரன் படம் எந்த அளவுக்கு ஜெயம் ரவிக்கு கம்பேக் கொடுக்கும் என்பதை வெயிட் பண்ணி தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X