சிவகார்த்திகேயன் த்ரிஷா விளம்பர வீடியோ ..இணையத்தில் வைரல் !
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் த்ரிஷாவுடன் இணைந்து நடித்த விளம்பர வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது.
தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இளவரசனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது மிகப்பெரிய ஒரு உயரத்தை எட்டி முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தற்போது ஹன்சிகா தொடங்கி கீர்த்தி சுரேஷ் வரை பல முன்னணி கதாநாயகிகளுடன் ஜோடி போட்டுள்ளார்.

பல தடைகள்
தமிழ்த் திரைப்படத் துறையில் தற்போது வளர்ந்து வரும் நம்பர் ஒன் இளம் நடிகராக முன்னேறி வருகிறார் சிவகார்த்திகேயன். இவரது படங்கள் அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்பட்டும் கொண்டாடப்பட்டும் வருகிறது. சிவகார்த்திகேயனின் படங்களில் பொதுவாக காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த நிலையில் தற்போது வந்த சில படங்கள் அதனை உடைத்து சமூக கருத்துக்களையும் மக்களின் பிரச்சனைகளையும் சொல்லும் படங்களாக தற்போது இருந்து வருகிறார்.

தயாரிப்பாளர்
இவர் தன்னுடைய திரைத்துறை வாழ்க்கை பயணத்தை பல கட்டங்களையும் பல சோதனைகளையும் சந்தித்து இவரின் கடின உழைப்புடனும் பலரது உதவியுடனும் தற்போது மேலோங்கி முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் இவரது திரைப்பயணம் மெரினா என்ற படத்தில் தொடங்கியதிலிருந்து தற்பொழுது ஹீரோ, நம்ம வீட்டு பிள்ளை வரை வந்திருக்கிறது. இவ்வாறு தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்பொழுது அயலான், டாக்டர் போன்ற படங்களில் நடித்து வருவது மட்டுமில்லாமல் கானா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு போன்ற சில படங்களை தயாரித்தும் வருகிறார்.

இணைந்து நடித்தார்
எப்போதும் வளரும் கலைஞர்களுக்கு கைகொடுக்கும் இவர் ஆரம்ப காலகட்டத்தில் த்ரிஷா உடன் இணைந்து நடித்த வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் தொகுப்பாளராக இருந்து போது பல குறும்படங்களிலும், தல அஜித் குமார் நடித்த ஏகன் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடித்து வந்த இவர் த்ரிஷா உடன் இணைந்து ஒரு விளம்பரப் படத்திலும் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன்
பிரபல சோப் கம்பெனி விளம்பரத்தில் இவர் த்ரிஷாவுடன் இணைந்து நடித்த அந்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. திரைப்படங்களில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக உள்ள சிவகார்த்திகேயன், பல வருடங்களாக முன்னணி நாயகியாக வலம் வரும் மூத்த நடிகை த்ரிஷாவும் இணைந்து இன்னும் எந்த ஒரு படத்திலும் நடிக்காத நிலையில் இவர்கள் இருவரையும் ஒரே வீடியோவில் சிவகார்த்திகேயன் மற்றும் த்ரிஷாவை பார்த்த அவர்களுடைய ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்து வருகின்றனர். இவ்வாறு விளம்பர படத்தில் நடித்தவர்களை திரைப்படத்திலும் ஒன்றாக பார்க்க அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு சிவகார்த்திகேயன் மற்றும் த்ரிஷா நடித்துள்ள இந்த விளம்பரப்பட வீடியோ தற்போது பலராலும் ஆச்சர்யதுடன் ரசிக்கப் பட்டும், பகிரப்பட்டு வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











