இப்படி எல்லாம் நடக்கும்னு யாருக்கு தெரியும்: சிவகார்த்திகேயன் பற்றி அனிருத்
சென்னை: சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகின்றன.
சிவகார்த்திகேயன் இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த காரணத்தால் #HBDSivaKarthikeyan, #HBDPrinceSK,#HappyBirthdaySivaKarthikeyan ஆகிய ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளன.
சிவா
10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கல்லூரி விழாவில் நான் கீபோர்டு வாசித்தபோது சிவகார்த்திகேயன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்... என்று ட்வீட் செய்துள்ளார் அனிருத்.
பிறந்தநாள்
பழைய விஷயத்தை நினைவூகூர்ந்ததுடன் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் அனிருத்.
தனுஷ்
சிவகார்த்திகேயன் பற்றி அனிருத் போட்ட ட்வீட்டை பார்த்த தனுஷ் ரசிகர்களோ உங்கள் திறமையை கண்டுபிடித்து வளர்த்துவிட்டதே எங்க அண்ணன் தான் என்கிறார்கள்.
வாழ்த்துக்கள்
சிவகார்த்திகேயனுக்கு அஜித், விஜய், சூர்யா, ஜெயம் ரவி, மகேஷ் பாபு ஆகியோரின் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











