முருகனாக மாறும் சிவகார்த்திகேயன்?.. கமல்ஹாசனின் அந்த பட டைட்டிலை தட்டித் தூக்கிட்டாரா!
சென்னை: டோலிவுட்டில் 'காட் ஆஃப் வார்' என முருகப் பெருமானின் கதையை பிரம்மாண்டமாக படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கோலிவுட்டிலும் அப்படியொரு முயற்சியை கமல்ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிவகார்த்திகேயனின் 25வது படமாக பராசக்தி படம் வெளியானது. அவரது 26வது படத்தை வெங்கட் பிரபு இயக்குவார் என எதிர்பார்த்த நிலையில், அந்த சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் வெளியாக தாமதம் ஆகும் என தெரிகிறது.

இந்நிலையில், கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் படத்தில் முருகனாக சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறார் என்றும் கமல்ஹாசன் பட டைட்டிலே அந்த படத்துக்கு பொருத்தமான டைட்டிலாக உள்ள நிலையில், அதையே வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
டாக்டரில் இருந்து டாப் கியர்: வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல் படங்கள் சிவகார்த்திகேயனை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக மாற்றின. ஆனால், நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து அவரை பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக மாற்றியது. இந்த ஆண்டு 10 கோடி ரூபாய் ஒரு படம் வசூல் செய்தாலே அது பிளாக்பஸ்டர் என சொல்லிக் கொள்ளும் அளவுக்கு தமிழ் சினிமா டல்லடித்துக் காணப்படும் நிலையில், கடும் விமர்சனங்களை சந்தித்த பராசக்தி படத்தையே 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் படமாக சிவகார்த்திகேயன் மாற்றினார்.

கமல் பட டைட்டில் தானா?: சிவகார்த்திகேயனுக்கு அமரன் எனும் மறக்க முடியாத படத்தைக் கொடுத்த ராஜ்கமல் நிறுவனம் அடுத்ததாக இன்னும் பிரம்மாண்ட படத்தை சிவகார்த்திகேயனை வைத்து உருவாக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில், கமல்ஹாசன் நடித்து வெளியான 'சூரசம்ஹாரம்' படத்தின் தலைப்பே இந்த படத்துக்கும் வைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. ஆனால், எப்படி இருந்தாலும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை படத்தின் டைட்டில் உடன் வெளியாகி விடும் என தெரிகிறது. முருகன் கதையாக இருந்தால் 'சூரசம்ஹாரம்' சரியான தலைப்பாக இருக்கும் என சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர்.
பழைய பட டைட்டில்கள்: சிவகார்த்திகேயனுக்கு மாவீரன், அமரன், மதராஸி, பராசக்தி என தொடர்ந்து பழைய பட டைட்டில்கள் சரியாக பொருந்தி வரும் நிலையில், சூரசம்ஹாரம் டைட்டில் இந்த படத்துக்கு கச்சிதமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. கூடிய சீக்கிரமே சிவகார்த்திகேயனின் 26வது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி விடும்.


Click it and Unblock the Notifications











