அண்ணன் தனுஷ் வழியில் நண்பனுக்காக துணிந்து ரிஸ்க் எடுக்கும் தம்பி சிவகார்த்திகேயன்
Recommended Video

சென்னை: நண்பனுக்காக சிவகார்த்திகேயன் செய்துள்ள வேலையை பற்றி தான் கோலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது.
அண்ணன் தனுஷை போன்றே அவர் வளர்த்துவிட்ட தம்பி சிவகார்த்திகேயனும் நடிப்பதோடு சேர்த்து படங்களை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கி உள்ளார்.
தனது நண்பன் அருண்ராஜா காமராஜுக்காக ஒரு படத்தை தயாரிக்கிறார் சிவகார்த்திகேயன்.

இயக்குனர்
ரஜினிகாந்தின் கபாலி படத்தில் வந்த நெருப்புடா பாடல் மூலம் பிரபலமான அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்
கிரிக்கெட் பின்னணியில் எடுக்கப்படும் இந்த படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு திங்கட்கிழமை துவங்கியது.

நண்பர்கள்
என் நண்பன் அருண்ராஜா காமராஜ் தனது திறமையை ஏற்கனவே நிரூபித்துவிட்டான். அருண் படத்தில் சத்யராஜ் அப்பாவாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் மகளாகவும் நடிக்கிறார்கள் என்றார் சிவகார்த்திகேயன்.

முக்கிய கதாபாத்திரம்
முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு அழகான இளைஞர் தேவைப்பட்டார். யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது எங்களின் நெருங்கிய நண்பர் தர்ஷனின் நினைவு வந்து அவரையே ஒப்பந்தம் செய்துள்ளோம் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

ஷூட்டிங்
நான், அருண், இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் எல்லாம் ஒன்றாக படித்தோம். மேலும் நாங்கள் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். அதனால் தான் முதல் நாள் படப்பிடிப்பை திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடியில் நடித்தினோம் என்று சிவகார்த்திகேயன் கூறினார்.


Click it and Unblock the Notifications











