எப்போதும் வெல்லும் உதயநிதி.. சிவகார்த்திகேயன், வடிவேலு என வரிசைக்கட்டி வாழ்த்தும் பிரபலங்கள்!

சென்னை: ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகிய நிலையில், விளையாட்டுத் துறை அமைச்சர் பதவியில் இருந்து தற்போது தமிழ்நாட்டுக்கு துணை முதலமைச்சராக மாறியுள்ளதற்கு சினிமா பிரபலங்கள் பலர் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்தும் நேரில் சந்தித்தும் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவும் அரசியலும் தனித்தனியாக எப்போதுமே இருந்தது கிடையாது என்றும் இரண்டுமே ஒன்றோடு ஒன்றாக பிண்ணி பிணைந்து இருக்கும் விஷயமாகவே உள்ளது. பராசக்தி படத்துக்கு வசனம் எழுதிய கலைஞர் கருணாநிதி, மக்கள் திலகம் எம்ஜிஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா என சினிமா ஆளுமைகள் ஆண்ட இந்த தமிழ்நாட்டை தற்போது சில படங்களிலும் சில சீரியல்களிலும் நடித்த மு.க. ஸ்டாலின் ஆட்சி செய்து வருகிறார்.

udhayanidhi stalin sivakarthikeyan vadivelu

மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக உள்ள நிலையில், அவருக்கு அடுத்ததாக திமுகவை தலைமை தாங்கி நடத்தும் பொறுப்பை இப்போதே உதயநிதி ஸ்டாலின் ஏற்கும் விதமாக அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

துணை முதலமைச்சரான உதயநிதி: ஆந்திராவில் பவன் கல்யாண் துணை முதலமைச்சராக உள்ளார். தமிழ்நாட்டிலும் முன்னணி தமிழ் சினிமா ஹீரோ ஒருவர் துணை முதலமைச்சராக மாறியுள்ளார். ஒரு கல் ஒரு கண்ணாடி, நண்பேன் டா, சரவணன் இருக்க பயமேன், மனிதன், கெத்து, கண்ணே கலைமானே, கலகத் தலைவன், மாமன்னன் என பல படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்களையும் மக்களையும் கவர்ந்த உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக மாறிய நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

udhayanidhi stalin sivakarthikeyan vadivelu

சிவகார்த்திகேயன் நேரில் வாழ்த்து: தனுஷ், சந்தானம், ஜெயம் ரவி, பிரதீப் ரங்கநாதன், வடிவேலு என பிரபலங்கள் வரிசையாக வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், சிவகார்த்திகேயன் நேரில் சென்று உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன் புகைப்படங்களும் தற்போது வெளியாகி இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

udhayanidhi stalin sivakarthikeyan vadivelu

தயாரிப்பாளர் செளத்ரி வாழ்த்து: சினிமா ஹீரோக்களை தாண்டி தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என சினிமா பிரபலங்கள் பலரும் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆனதற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரபல தயாரிப்பாளர் எஸ்.பி. செளத்ரி தனது சமூக வலைதள பக்கத்தில் "எம் உள்ளத்தில் பாயும் ஜீவநதி.. எப்போதும் வெல்லும் உதயநிதி.. வாழ்த்துக்கள் அண்ணா" என போஸ்ட் போட்டு வாழ்த்தியுள்ளார். மேலும், பல சினிமா பிரபலங்கள் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆனதற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

udhayanidhi stalin sivakarthikeyan vadivelu

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X