லிங்குசாமி தயாரிப்பில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன்
இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க விஜய் சேதுபதி, சிவகார்த்திக்கேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அடுத்தடுத்து மூன்று படங்களை தயாரிக்கிறது. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடிக்கும் படம் விரைவில் துவங்குகிறது.
இதனையடுத்து வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கிறது திருப்பதி பிரதர்ஸ்.

விஜய் சேதுபதி - சீனு ராமசாமி
ஒரு படத்தை தேசிய விருது பெற்ற சீனு ராமசாமி இயக்குகிறார். அதில் விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். தென்மேற்கு பருவக்காற்று படத்தில் விஜய்சேதுபதியை அறிமுகப்படுத்தியவர் சீனு ராமசாமி.

சிவகார்த்திகேயன் - பூபதி பாண்டியன்
பூபதி பாண்டியன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தையும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. காமெடி ஆக்ஷன் படங்களை இயக்கும் பூபதி பாண்டியன் தற்போது விஷால், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நடிக்கும் பட்டத்துயானை படத்தை இயக்கி வருகிறார். இதனையடுத்து சிவகார்த்திக்கேயனை இயக்குவார்.

செப்டம்பரில் படப்பிடிப்பு
இந்த இரண்டு படத்தின் படப்பிடிப்புகளும் செப்டம்பர் மாதம் துங்குகிறது. ஹீரோக்கள் தவிர மற்ற கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் மூன்று படங்களும் முடிந்து விடும். அதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது" என்று தயாரிப்பாளரும், லிங்குசாமியின் சகோதரருமான என்.சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார்.

கடலில் விழுந்த லிங்குசாமி
மணிரத்னம் இயக்கிய கடல் படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்தான் வெளியிட்டது. அதில் பலத்த அடிவாங்கி கவலைப்பட்டுக் கொண்டிருந்த லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அடுத்தடுத்து 3 படங்களை தயாரிக்கிறது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











