Sivakarthikeyan: "சிவகார்த்திகேயன் பணம் கொடுத்து அசிங்கப்படுத்திட்டாரு..” விஜய் டிவி பிரபலம் வேதனை

சென்னை: விஜய் டிவியில் இருந்து சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். தற்போது கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் பணம் கொடுத்து அசிங்கப்படுத்திவிட்டதாக விஜய் டிவி பிரபலம் ஒருவர் வேதனை தெரிவித்துள்ளது வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயனால் விஜய் டிவி பிரபலம் கண்ணீர்
தமிழில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயன், விஜய் டிவியில் இருந்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கலக்க போவது யாரு, ஜோடி நம்பர் 1 என விஜய் டிவி நிகழ்ச்சிகள் தான் சிவகார்த்திகேயனுக்கு நல்ல அறிமுகம் கொடுத்தது. அப்போது அவருடன் பணியாற்றிய நெல்சன் இப்போது லீடிங் டைரக்டர் ஆகிவிட்டார்.

 Sivakarthikeyan: Vijay TV fame Actor Black Pandi smashed Sivakarthikeyan

இப்படி சிவகார்த்திகேயனுடன் விஜய் டிவியில் பயணித்த பலரும் தற்போது சினிமாவில் செட்டில் ஆகிவிட்டனர். சிவகார்த்திகேயனும் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அடிக்கடி தனது படங்களில் நடிக்க வைத்து அழகுப் பார்க்கிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் குறித்து விஜய் டிவி பிரபலம் நடிகர் பிளாக் பாண்டி வேதனை தெரிவித்துள்ளது வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல், ஜோடி நம்பர் 1 ஷோ ஆகியவை மூலம் பிரபலமானவர் பாண்டி. ஆட்டோகிராஃப், அங்காடித் தெரு, ஜில்லா, வேலாயுதம், பூஜை உட்பட பல படங்களில் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார். தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்படுவதாக தெரிகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் சிவகார்த்திகேயனை சந்தித்துள்ளார் பிளாக் பாண்டி.

அப்போது விஜய் டிவியில் அவருடன் பழகிய அதே உரிமையில், "சிவா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றுள்ளார். ஆனால் பாண்டியை சிவகார்த்திகேயன் கண்டுகொள்ளாமல் போனதாகவும், பின்னர் அவரது மேனேஜரிடம் கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பியதாகவும் பாண்டி கூறியுள்ளார். இது தனக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது, நான் அவரிடம் எதாவது நடிக்க வாய்ப்பு இருந்தால் கேட்கலாம் என நினைத்தேன்.

விஜய் டிவியில் ஒன்றாக வேலை பார்த்துள்ளதால் அவரது படங்களில் நடிக்க சிவா சான்ஸ் கொடுப்பார் என்ற ஆசையில் தான் பேச நினைத்தேன். எனக்கு கை, கால் எல்லாம் நல்லா தான் இருக்கு... அப்படி இருக்கும் போது எனக்கு பணம் எதுக்கு என்பதால் சிவகார்த்திகேயன் மேனேஜர் கொடுத்த தொகையை வாங்கவில்லை. ஆனால் சிவகார்த்திகேயனின் மேனேஜர் அவரிடம் என்ன சொன்னார் என்று தெரியவில்லை. அதன்பிறகு சிவகார்த்திகேயன் தன்னிடம் பேசுவதே கிடையாது என வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை ப்ளூ சட்டை மாறன் தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X