Sivakarthikeyan: மதுரையில் சிவகார்த்திகேயன்.. அமரன் வெற்றி.. குடும்பமாக அழகர் தரிசனம்!
மதுரை: நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகராக மாறி வருகின்றார். எந்தக் கதாபாத்திரத்திற்கும் நான் பொருந்திப் போவேன் என ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல், தமிழ் திரையுலகத்திற்கே உணரவைத்து வருகின்றார். கோட் படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்த பின்னர் இவரது ரசிகர்கள் பட்டாளம் பல மடங்கு பெருகிவிட்டது. அதேபோல், தமிழ் சினிமாவில் இருக்கக் கூடிய பெரிய நடிகர்களின் அன்பைப் பெற்றுள்ளதால், இவருக்கு ரசிக ஏராளமாகிவிட்டார்கள். இப்படியான நிலையில், இவர் இன்று அதாவது டிசம்பர் 8ஆம் தேதி மதுரை அழகர் கோவிலில் தனது மனைவியுடன் தரிசனம் செய்துள்ளார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து அதில் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்த சிவகார்த்திகேயன், இப்போது ஒரு உச்சத்தினை அடைந்துள்ளார். இவர் இன்னும் அடையவேண்டிய உயரம் அதிகம் இருந்தாலும், சினிமாவில் சாதிக்க நினைக்கும் பலருக்கும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி என்பது விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாக அமையும். பலகுரல் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய சிவகார்த்திகேயன், அதன் பின்னர், நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக மாறி, டைட்டிலும் வென்றார். அதன் பின்னர், விஜய் டீவியில் இவரது நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காகவே, சனிக்கிழமை டி.வி முன் அமரும் ரசிகர்கள் ஏராளமாக இருந்தனர்.

தனது அட்டகாசமான பேச்சுத் திறமையாலும், மெமிக்கிரி திறமையையும் கொண்டு பல திரைப்பிரபலங்களின் கவனத்தை ஈர்த்தார். இவரது திறமையை அடையாளம் கண்ட இயக்குநர் பாண்டிராஜ் சிவகார்த்திகேயனை சினிமாவுக்கு அழைத்துவந்தார். அதன் பின்னர் தனுஷ் இவருக்கு கொஞ்சம் பக்கபலமாக இருக்க, தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகராக மாறினார்.

அமரன் வெற்றி: கடைசியாக இவரது நடிப்பில் வெளியான அமரன் படம் தியேட்டர் வசூலில் மட்டும், மாபெரும் வெற்றிப் படமாக மாறியது. எட்டு வாரங்களாக தியேட்டரில் ஓடிய அமரன் படம் வசூலில் மட்டும் உலகம் முழுவதும் சேர்த்து கிட்டத்தட்ட, ரூபாய் 320 கோடிகளைக் கடந்து வசூல் செய்தது. இது சிவகார்ர்த்திகேயன் இதுவரை நடித்துள்ள படங்களில் அதிக வசூல் செய்த படமாக மாறியுள்ளது. மேலும் வெளிநாடுகளில் கமல்ஹாசனின் விக்ரம் படம் செய்த வசூலையும் முறியடித்துள்ளது.

படங்கள்: சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடித்து வருகின்றார். மேலும் டான் பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தியுடனும் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்தப் படம் சிவகார்த்திகேயனின் 24வது படமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோல், தனது 25வது படத்திற்காக, இயக்குநர் சுதா கொங்கராவுடன் இணையவுள்ளார். சிவகார்த்திகேயன் கதைத்தேர்வில் மிகுந்த கவனம் செலுத்துவதால், ரசிகர்கள் மத்தியில், குறிப்பாக குடும்ப ரசிகர்கள் மத்தியில் இவரது படங்கள் மீது தனி நம்பிக்கையே ஏற்பட்டு விடுகின்றது.

அழகர் தரிசனம்: இப்படியான நிலையில் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன், மதுரையில் உள்ள அழகர் கோவிலில் தரிசனம் செய்தார். இவரைக் கோவிலில் பார்த்ததும், அங்கு கூடியிருந்த பக்தர்கள் சிவகார்த்திகேயனுடன் புகைப்படம் எடுக்கவும் செல்ஃபி எடுக்கவும் போட்டி போட்டனர். ஏற்கனவே, சிவகார்த்திகேயன் வருவார் என்ற தகவல் காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டதால், பாதுக்காப்பிற்காக கூடுதலாக காவலர்கள் நியமிக்கப்பட்டனர். அழகரை தரிசித்தப் பின்னர், அங்கிருந்த புசாரிகளும் சிவகார்த்திகேயனோடு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


Click it and Unblock the Notifications











