சிவகார்த்திகேயனைவிட நான்தான் சீனியர்.. தயாரிப்பாளர்களிடம் கறார் காட்டும் தனுஷ்?.. முக்கிய தலைக்கட்டு ஓபன் டாக்

சென்னை: சிவகார்த்திகேயன் இப்போது வளர்ந்துவிட்ட நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். கடைசியாக வெளியான அவரது ஐந்து படங்கள் ஒன்று மெகா ஹிட்டாகியிருக்கின்றன இல்லையென்றால் சூப்பர் ஹிட்டாகியிருக்கின்றன. சமீபத்தில் வெளியான பராசக்தி படம்கூட சூப்பர் ஹிட் என்றே கருதப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுபர்மணியம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஓபனாக பேசியிருக்கிறார்.

சிவகார்த்திகேயனுக்கு கடந்த சில வருடங்கள் நல்லபடியாகவே அமைந்திருக்கிறது. ப்ரின்ஸ் படத்தின் தோல்வி அவரது கரியரை முடித்துவிடும் என்றுதான் பலரும் எதிர்பர்த்தார்கள். ஆனால் சுதாரித்துக்கொண்ட எஸ்கே அந்தப் படத்துக்கு பிறகு தேர்ந்தெடுக்கும் கதைகளில் கூடுதல் கவனம் செலுத்தினார். அப்படி அவர் நடித்த மாவீரன், அயலான், அமரன் ஆகிய படங்கள் அவரை தோல்வியிலிருந்து மீட்டெடுத்தன.

அமரன் மெகா ஹிட்: அதிலும் அமரன் படத்தை சொல்லவே வேண்டாம். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. முக்கியமாக சிவாவை நம்பி எந்த ரோலையும் கொடுக்கலாம் என்ற பிம்பத்தை படைப்பாளர்கள் மத்தியில் உருவாக்கியது. அதைவிட முக்கியமாக அப்படத்தின் வியாபாரம் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் வேல்யூவை உச்சத்தில் கொண்டு சென்று நிறுத்திவிட்டதாகவே தெரிகிறது. அந்த வெற்றியால் தனது சம்பளத்தையும் உயர்த்திவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Sivakarthikeyan vs Dhanush Salary Clash Tiruppur Subramaniam Reveals the Truth
Photo Credit:

பராசக்தியும் சூப்பர் ஹிட்: அதாவது அமரன் வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய்வரை அவர் சம்பளம் வாங்குவதாக திரைத்துறையில் முக்கியஸ்தர்கள் சொல்கிறார்கள். சமீபத்தில் வெளியான பராசக்தி படத்தில்கூட அவர் 30 கோடி ரூபாய்க்கும் மேல்தான் சம்பளம் வாங்கினார் என தகவல்கள் வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பராசக்தியும் டீசன்ட்டான வெற்றியை பெற்றுவிட்டதால் கண்டிப்பாக வெங்கட் பிரபு படத்துக்கு மேற்கொண்டு சம்பளத்தை உயர்த்த வாய்ப்புகளும் இருக்கின்றன.

தனுஷுடன் போட்டி?: இதற்கிடையே சிவகார்த்திகேயனுக்கும் தனுஷுக்கும் தொடர்ந்து மோதல் நிலவிவருவதாக ஒருதரப்பினர் சொல்கிறார்கள். தனுஷுடன் மட்டுமின்றி தன்னை திரைத்துறையில் யாரெல்லாம் வளர்த்தார்களோ அவர்களை எல்லாம் இப்போது சிவா ஒதுக்கிவிட்டார் அல்லது போட்டி போடுகிறார் என்றும் அவர்கள் கிளப்பிவிடுகிறார்கள். இது உண்மையா இல்லையா என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியும். அதேசமயம் எஸ்கே அப்படிப்பட்ட் ஆளே இல்லை. வேண்டுமென்றே அவரை காலி செய்வதற்காகத்தான் அவர் மீது வன்மத்தை கக்குகிறார்கள் என்பது சிவா ரசிகர்களின் ஆழமான கருத்து.

திருப்பூர் சுப்ரமணியம் பேட்டி: இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் சமீபத்தில் அளித்த் பேட்டியில், "சமீபத்தில்கூட நான் கேள்விப்பட்டேன். சிவகார்த்திகேயன் 30 கோடி ரூபாய் சம்பளம் கேட்டவுடன்' பத்து கோடி ரூபாய் வாங்கிக்கொண்டிருந்த தனுஷ் எனக்கு 35 கோடி ரூபாய் சம்பளம் கொடுங்கள் என கேட்கிறாராம். சிவகார்த்திகேயன் இப்போ வந்தாரு. நான் அவருக்கு முன்னாடிலேர்ந்தே இருக்கேன். அவருக்கு 30 கோடி கொடுக்கும்போது எனக்கு 35 கோடி கொடுங்க என கேட்கிறாராம். இப்படித்தான் போட்டி போடுகிறார்கல். சிவா நான்கு ஹிட்டுகள் தருகிறார். நானும் அதைவிட அதிகம் கொடுக்கிறேன் என சொல்ல மாட்டேன் என்கிறார்கள். இதில்தான் போட்டி போடுகிறார்கள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X