Don FDFS: ரசிகர்களுடன் டான் படம் பார்த்த சிவகார்த்திகேயன்.. சிவாங்கி, அனிருத் என அனைவரும் ஆஜர்!

சென்னை: டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் டான் திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில், டான் திரைப்படத்தின் FDFSக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

Recommended Video

Don Movie Review | Yessa ? Bussa ? | டான் | Sivakarthikeyan | S. J. Suryah | Filmibeat Tamil

வெற்றி தியேட்டரில் ரசிகர்களுடன் டான் திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் அதிகாலை காட்சிக்கே வந்து பார்த்து ரசித்தார்.

சிவகார்த்திகேயன் மட்டுமின்றி டான் படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் டான் படத்தின் FDFS காட்சியை பார்த்த புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.

வெளியானது டான்

வெளியானது டான்

லைகா தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, சூரி, சிவாங்கி, பால சரவணன், முனிஸ்காந்த் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி உள்ள டான் திரைப்படம் மே 13ம் தேதியான இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

வெற்றி தியேட்டரில் சிவகார்த்திகேயன்

வெற்றி தியேட்டரில் சிவகார்த்திகேயன்

சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் டான் படக்குழுவினர் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் கண்டு ரசித்தனர். வெற்றி தியேட்டருக்கு சிவகார்த்திகேயன் என்ட்ரி கொடுத்ததும் ரசிகர்கள் தமிழ்நாட்டின் டான் என ஆரவாரம் செய்தனர். ரசிகர்களுக்கு கை அசைத்து அவர்களுடன் படத்தை பார்த்து மகிழ்ந்தார் சிவகார்த்திகேயன்.

தியேட்டரே ஆடுது

டான் படத்தின் ஓப்பனிங் பாடலான ஜலபுல ஜங் பாடலுக்கு ஒட்டுமொத்த தியேட்டரே எழுந்து ஆடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. தெறி படத்தின் ஜித்து ஜில்லாடியை போல பயங்கர கலர்ஃபுல்லாக டான் படத்தின் ஜலபுல ஜங் பாடல் காட்சி அமைந்துள்ளது. விஜய்க்கு அடுத்து கோலிவுட்டில் செம ஸ்டைலாக ரசிகர்களை கவரும் விதமாக டான்ஸ் ஆடி கெத்துக் காட்டி வருகிறார் சிவகார்த்திகேயன்.

ரஜினி ரெஃபரன்ஸ்

ரஜினி ரெஃபரன்ஸ்

நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் சிவகார்த்திகேயன் என்பது தெரிந்த ஒன்று தான். இயக்குநர் சிபி சக்கரவர்த்தியும் வெறித்தனமான ரஜினி ரசிகர் போல, டான் படத்தில் ஏகப்பட்ட ரஜினிகாந்த் ரெஃபரன்ஸ் காட்சிகளை வைத்து ரஜினிகாந்த் ரசிகர்களின் அன்பை அள்ளி உள்ளார். கிளாஸ் ரூமில் எந்திரன் படம் பார்ப்பது, தியேட்டரில் சிவாஜி படம் பார்ப்பது என சிவகார்த்திகேயன் வேற லெவல் ரகளை.

பெற்றோர்களுடன் சிவாங்கி

பெற்றோர்களுடன் சிவாங்கி

குக் வித் கோமாளி மூலம் பிரபலமான சிவாங்கி டான் படத்தில் செம காமெடியான ரோலில் நடித்துள்ளார். டான் படத்தின் FDFS காட்சியை தனது பெற்றோர்களுடன் தியேட்டருக்கு வந்து பார்த்த சிவாங்கி ரசிகர்களுக்கு கை அசைக்கும் புகைப்படம் டிரெண்டாகி வருகிறது. பாட்டு பாடுவது, நடிப்பது என கலக்கி வருகிறார் சிவாங்கி.

அனிருத் ஆஜர்

அனிருத் ஆஜர்

டான் படத்தின் பெரிய பலமே இசையமைப்பாளர் அனிருத் தான். சிவகார்த்திகேயனுக்கும் அனிருத்துக்கும் தொடர்ந்து செம வைப் வொர்க்கவுட் ஆகி வருகிறது. இந்நிலையில், டான் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க படக்குழுவினருடன் அவரும் தியேட்டருக்கு விசிட் அடித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

சிபி செம ஹேப்பி

சிபி செம ஹேப்பி

இயக்குநர் அட்லியின் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த சிபி சக்கரவர்த்தி டான் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார். முதல் படம் போலவே இந்த படத்தை பார்த்தால் தெரியவில்லை என ரசிகர்கள் பலரும் பாராட்டுவதை கேட்டு இயக்குநர் சிபி செம ஹேப்பியாகி உள்ளார். ஆர்ஜே விஜய் உடன் சிபி தியேட்டரில் பேசும் புகைப்படமும் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X