மாஸ் என்ட்ரி கொடுத்த சூர்யா, ஜோதிகா.. ஓடி வந்த சிவகார்த்திகேயன்.. களைகட்டிய தாய் கிழவி பிரீமியர் ஷோ!
சென்னை: ராதிகா சரத்குமாரின் அசத்தலான நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'தாய் கிழவி. இப்படம் பிப்ரவரி 27ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பிரீமியர் ஷோவில் சூர்யா , ஜோதிகா இருவரும் ஜோடியாக வந்து இருந்தனர்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில் சிங்கம் புலி, பால சரவணன், முனிஷ்காந்த், இளவரசு, அருள்தாஸ், ஜார்ஜ் மரியன், முத்துகுமார், ரேச்சல் ரெபேக்கா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், பேசிய ராதிகா, இந்த படத்திற்காக 3 மணி நேரம் மேக்கப் போட்டேன். அப்போது தான் நான் கமலை நினைத்து மிகவும் பெருமைப்பட்டேன் என்றார்.

தாய் கிழவி: தொடர்ந்து பேசிய ராதிகா, இந்த படத்தில் கலையரசி ராதிகா என்று, என் பெயருக்கு முன்னால் பட்டத்தை போட்டு இருக்கேன். அந்த கலையரசி பட்டத்தை கொடுத்தது டாக்டர் கலைஞர் எனக்கு கொடுத்தது. எனக்கு எப்போதுமே பெயருக்கு முன்னால் பட்டத்தை போடுவதில் ஆர்வம் இல்லை. ஆனால், இந்த படத்தில் மிகவும் பெருமையாக கலையரசி என்ற பட்டத்தை நான் போட்டு இருக்கிறேன். நான் சினிமாவிற்கு வந்த புதிதில் என்னை பலரும் அவமானப்படுத்தினார்கள். என் தந்தையின் பெயரை சொல்லக்கூடாது என்றார்கள். ஆனால், இன்று எம்.ஆர். ராதாவின் மகள் என்று பெருமையாக, தேனாவட்டாக சொல்கிறேன் என்றார்.
சூர்யா. ஜோதிகா: இதையடுத்து இன்று தாய் கிழவி படத்தின் பிரீமியர் ஷோவிற்கு சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ஜோடியாக வந்து இருந்தனர். அவர்களை ராதிகா சரத்குமார் கட்டி தழுவி வரவேற்றார். சூர்யாவை பார்த்த சிவகார்த்திகேயன் ஓடி சென்று கட்டியணைத்து இருவரையும வரவேற்றார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பல நாட்களுக்கு பின் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ஒன்றாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications