கிரிக்கெட் வீராங்கனைக்கு சிவகார்த்திகேயன் இப்படி ஒரு உதவியா? மனம் நெகிழ்ந்த சஜனா

மும்பை: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து மும்பை அணிக்கு வெற்றியை தேடி கொடுத்த சஜீவன் சஜனா, தமிழில் வெளியான கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்தவர் என்பது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது. அதை விட கூடுதல் சிறப்பாக தற்போது புதிய தகவலை அவரே தெரிவித்துள்ளார். தனது கிரிக்கெட் கெரியரில் சிவகார்த்திகேயன் அண்ணா செய்த உதவியை மறக்கமாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். எந்தவித எதிர்பார்ப்பும் இன்று எனக்கு உதவி செய்தார் என தெரிவித்தார்.

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராக வலம் வருகிறார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் ரூ.350 கோடி வசூலை பெற்று மாபெரும் வெற்றியை பெற்றது. ராணுவ அதிகாரியாக நடித்து விமர்சன ரீதியாகவும் நல்ல ஆதரவு கிடைத்தது. எதிர்மறை விமர்சனங்களை தாண்டி இப்படம் அதிரி புதிரி ஹிட் அடித்தது. வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களுக்கு முன் மாதிரியாகவும் சிவகார்த்திகேயன் இருக்கிறார். கடின உழைப்பால் உயர்ந்து உட்ச நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளார்.

sivakarthikeyan Help Sajeevan sajana Kana movie

பராசக்தி ஹீரோவாக SK: அமரன் பட வெற்றிக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது. நடிப்பில் பிசியாக இருந்தாலும், பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். அந்தவகையில் விளையாட்டு என்றால் சிவகார்த்திகேயனுக்கு பிடித்த பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது.

இவர் தயாரித்து நடித்த கனா படமும் கிரிக்கெட்டை மையமாக வைத்தே உருவானது. இந்நிலையில், அப்படத்தில் நடித்த சஜீவன் சஜனா என்ற கிரிக்கெட் வீராங்கனைக்கு இவர் உதவி செய்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

உதவிக்கரம் நீட்டிய சிவகார்த்திகேயன்: நெல் ரகங்களை சேகரித்து பாதுகாத்து வந்த நெல் ராமன் மரணிக்கும் தருவாயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சிவகார்த்திகேயன் உதவிக்கரம் நீட்டினார். அதேபோன்று வெள்ளம், புயல் பாதிப்புகளுக்கு தன்னால் இயன்ற உதவியை அரசிடம் நன்கொடையாக வழங்கினார். எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி உதவி செய்யும் சிவகார்த்திகேயன், விளையாட்டில் சாதிக்க நினைக்கும் மாணவர்கள், வீரர், வீராங்கனைகளுக்கும் ஓடோடி உதவி செய்திருப்பது நெட்டிசன்களை நெகிழ செய்துள்ளது. அண்மையில் உலக செஸ் சேம்பியன் குகேஷை சந்தித்து கடிகாரம் பரிசாக வழங்கினார்.

sivakarthikeyan Help Sajeevan sajana Kana movie

அண்ணா என்று அழைத்த சஜீவன்: கேரளா மாநிலம் வயநாடை சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை சஜீீவன் சஜனா இந்திய மகளிர் அணியில் தற்போது நட்சத்திர ஆட்டக்காரராக ஜொலித்து வருகிறார். சமீபத்தில், இவர் அளித்த பேட்டியில், 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் வயநாடு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. அதில், கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களை முழுமையாக இழந்தேன், இதனால், என் கெரியர் என்ன ஆகும் என்ற பயமும் இருந்தது.

அப்போது, நடிகர் சிவகார்த்திகேயன் சாரிடம் இருந்து என போனில் அழைப்பு வந்தது. அப்போது அவர் என்னை அண்ணா என்று கூப்பிடவும், என்று கூறினார். மேலும், உனக்கு ஏதாவது உதவி வேண்டுமா என்று அன்புடன் கேட்டார். பின்னர், சிவகார்த்திகேயன் சார் தான் எனக்கு கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி வாங்கி தந்தார். இந்த உதவியை என் வாழ்வில் மறக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X