World Of Parasakthi: மகள்களுடன் பராசக்தி உலகத்தை பார்க்க போன ஆர்த்தி சிவகார்த்திகேயன்..
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் பராசக்தி. இந்த படத்தை ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு உள்ளார்கள். இப்படி இருக்கும்போது படம் வரும் ஜனவரி 14ஆம் தேதி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இதனால் படக்குழு படத்தின் புரோமோசன் வேலைகளை தரமாக செய்து வருகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் "World Of Parasakthi" எனும் தலைப்பில் படக்குழு நடத்தும் கண்காட்சிக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் குடும்பத்துடன் வந்து பார்த்துச் செல்கிறார்கள். இப்படி இருக்கும்போது, இந்த கண்காட்சியில் சிவகார்த்திகேயனின் குடும்பத்தினர் மொத்தமாக கலந்து கொண்டுள்ளனர்.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பராசக்தி. நடிகர் ரவி மோகன் வில்லனாக நடிக்கிறார். அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் புரோமோசனில் ஒரு பகுதியாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் "World Of Parasakthi" எனும் தலைப்பில் படக்குழு நடத்தும் கண்காட்சிக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் குடும்பத்துடன் வந்து பார்த்துச் செல்கிறார்கள். படத்தின் கதைக்களம் 1960 கால கட்டத்தை மையப்படுத்தியது என்பதால், ரசிகர்களை படத்திற்கு தயார் படுத்தும் விதமாக படத்தில் பயன்படுத்தப்பட்ட 1960 காலகட்ட பொருட்களை கண்காட்சியாக வைத்துள்ளனர்.

பராசக்தி: தொடக்கத்தில் இந்த கண்காட்சியை கடந்த வெள்ளிக்கிழமை அதாவது, கடந்த 19ஆம் தேதி முதல் இன்று வரை தான் படக்குழு திட்டமிட்டிருந்தனர். ஆனால் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பால், இந்த கண்காட்சியை மேலும் நீட்டிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இது மட்டும் இல்லாமல், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் இந்த கண்காட்சியை படக்குழு திட்டமிட்டுள்ளது.
எஸ்.கே குடும்பம்: இப்படி இருக்கும்போது நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி, மகள் ஆராதனா, முதல் மகன் குகன் தாஸ், இரண்டாவது மகன் பவன் உள்ளிட்ட நால்வரும் சென்று கண்காட்சியை பார்த்துள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை சிவகார்த்திகேயனின் மனைவி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு வீட்டில் இருந்து பராசக்தி உலகத்திற்குள் என்று கேப்ஷனும் இட்டுள்ளார். அவரது இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











