Sivakarthikeyan: என்ன சிவகார்த்திகேயன் இதெல்லாம் தேவையா..? வம்பில் மாட்டிவிடும் சன் பிக்சர்ஸ்!
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் ஜூலை 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தப் படம் ஆக்ஸ்ட் 11ம் தேதி வெளியாகவிருந்த நிலையில், ரஜினியின் ஜெயிலருக்காக ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

இதனிடையே கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK 21 படத்தின் ஷூட்டிங் நேற்று பூஜையுடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
சிவகார்த்திகேயனின் புதிய காம்போ
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சிவகார்த்திகேயன் காட்டில் அடை மழை பெய்து வருகிறது. டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து டான், பிரின்ஸ் என அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் மாஸ் காட்டினார். அதேவேகத்தில் மடோன் அஸ்வினி இயக்கிய மாவீரன் படத்திலும் சிவா நடித்து முடித்துவிட்டார். இந்தப் படம் ஜூலை 14ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயனின் SK 21 படப்பிடிப்பும் பூஜையுடன் தொடங்கியது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்க, SK 21 படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கியது. இதனையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் குறித்து இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.
அதேநேரம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் கமிட் ஆகியுள்ளாராம். இந்தப் படத்தின் இயக்குநர் யார் என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஆனால், சிவகார்த்திகேயனுடன் இயக்குநர் முத்தையாவை கோர்த்துவிட சன் பிக்சர்ஸ் திட்டமிட்டு வருகிறதாம். சிவகார்த்திகேயன் கேரியரில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இது பக்கா கிராமத்து திரைப்படமாக உருவாகியிருந்தது.
அதன் பின்னர் ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை படங்களில் மட்டும் வில்லேஜ் ஹீரோவாக நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனை இன்னும் வெறித்தனமான வில்லேஜ் ஹீரோவாக பார்க்க ஆசைப்படும் சன் பிக்சர்ஸ், வில்லங்கமான முத்தையாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். இது உறுதியானால் விரைவில் சிவகார்த்திகேயன் - முத்தையா கூட்டணியில் ஒரு வில்லேஜ் வெறித்தனம் வெயிட்டிங்கில் உள்ளது.

வில்லேஜ் ஸ்பெஷலிஸ்ட் இயக்குநரான முத்தையா கொம்பன், மருது, விருமன் போன்ற ராவான வில்லேஜ் படங்கள் மூலம் பிரபலமானவர். தற்போது ஆர்யா நடிப்பில் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து தான் ஜெயம் ரவியின் படத்தையும் அவர் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தக் கூட்டணி குறித்த அப்டேட்டும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











