தாய் கிழவி தாண்டவம்.. சிவகுமார் முருகேசன் உடன் இன்னொரு படம் பண்ணப் போறாரா சிவகார்த்திகேயன்?
சென்னை: கோட் படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயனை வைத்து படம் பண்ண ப்ரீ புரொடக்ஷன் வேலைகளை வெங்கட் பிரபு பார்த்து வரும் சூழலில் இப்போதைக்கு சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு காம்போ ஸ்டார்ட் ஆகாது என்றே கோலிவுட்டில் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
அதற்கு காரணம் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடித்துள்ள தாய் கிழவி படம் தான். ரஜினிகாந்தே இந்த படத்தில் நடிக்க வேண்டியது என ராதிகா கொடுத்த பில்டப்பை பார்த்து பலரும் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இந்த வாரம் கணவர் சரத்குமாரின் ஆழி படத்துடன் தாய் கிழவி படமும் போட்டியாக வெளியாகிறது. இந்நிலையில், சேயோன் மட்டுமின்றி இன்னொரு படத்திலும் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உடனடியாக சிவகார்த்திகேயன் இணையப் போகிறார் என தகவல்கள் கசிந்துள்ளன.
தாய் கிழவி தாண்டவம்: சிவகுமார் முருகேசன் இயக்கத்தி இந்த வாரம் வெளியாகவுள்ள தாய் கிழவி திரைப்படம் கண்டிப்பாக தியேட்டர்களில் தாண்டவம் ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிப்ரவரி மாதம் இதுவரையில் அபிஷன் ஜீவிந்தின் வித் லவ் திரைப்படம் மட்டுமே 25 கோடி வசூலை கடந்து வெற்றிப் பெற்றது. இந்நிலையில், கோலிவுட்டுக்கு தாய் கிழவி நல்ல லாபத்தைக் கொடுக்கும் படமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராதிகா சரத்குமாருக்கு தேசிய விருது கூட கிடைக்கலாம் என்று படம் பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர்.
சிவகார்த்திகேயனின் சேயோன்: கொட்டுக்காளி படம் ஹிட்டாகி இருந்தால் இந்நேரம் பி.எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படம் நடித்திருப்பார் என்று கூறுகின்றனர். ஆனால், அந்த படம் கமர்ஷியல் வெற்றி பெறாத சூழலில் சிவகுமார் முருகேசன் படம் அந்த வெற்றியை தரும் என சிவகார்த்திகேயன் நம்புவதால் தான் வெங்கட் பிரபு படத்துக்கு முன்பாக சேயோன் படத்தை ஆரம்பித்துள்ளார் எனக் கூறுகின்றனர்.
அடுத்து ஒரு படம்: இந்நிலையில், சேயோன் படம் ஆரம்பித்துள்ள நிலையில், சிவகுமார் முருகேசன் சொன்ன இன்னொரு கதையும் சிவகார்த்திகேயனுக்கு பிடித்துப் போய்விட்டதாம். சேயோன் முடித்த கையோடு அந்த படத்தையும் எடுத்து விடலாம் என்கிற முனைப்பு காட்டி வருகிறார் என்றும் இந்த இரண்டு படங்களும் குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கப்படும் என்றும் அடுத்த ஆண்டு தான் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போவார் என்றும் கூறுகின்றனர். சேயோன் படம் நிறைவடைந்த் பின்னர் தான் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த அப்டேட் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications