Sivakarthikeyan - சிவகார்த்திகேயன் செய்யப்போகும் சைலண்ட் சம்பவம் இதுவா?.. அவருடன் மீண்டும் இணைகிறார்
சென்னை: Sivakarthikeyan (சிவகார்த்திகேயன்) சிவகார்த்திகேயன் அடுத்த அமைக்கவிருக்கும் கூட்டணி குறித்த தகவல் வெளியாகி எஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சின்னத்திரையில் தோன்றி தற்போது கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்து அதில் சென்றுகொண்டிருக்கும் அவருக்கு சிறுவர்கள்,சிறுமிகள் ரசிகர் ரசிகைகளாக இருக்கின்றனர். அதுமட்டுமின்றி அவர் நடித்த டாக்டர், டான் ஆகிய படங்கள் தொடர்ச்சியாக நூறு கோடி ரூபாயை வசூலித்தது. இதன் காரணமாக சிவகார்த்திகேயனுக்கான வியாபாரம் பெருகியது.

அடிவாங்கிய பிரின்ஸ்: வரிசையாக இரண்டு படங்கள் 100 கோடி வசூலில் இணைந்ததால் அனூதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படம் பெரும் எதிர்பார்ப்பை சம்பாதித்தது. மேலும் அப்படம் பைலிங்குவலாக உருவானதால் தெலுங்கிலும் ஒரு ரவுண்ட் வரலாம் என கணக்கு போட்டிருந்தார் சிவா. ஆனால் அவரது கணக்கை தவிடுபொடியாக்கியது பிரின்ஸ் ரிசல்ட். படத்தை ஒரு வாரத்திலேயே தியேட்டர்களில் இருந்து தூக்கிவிட்டார்கள்.
மாவீரன் சிவகார்த்திகேயன்: பிரின்ஸ் கொடுத்த அடிக்கு மருந்தாக மாவீரன் இருக்கும் என நம்பியிருந்தார் சிவகார்த்திகேயன். அதற்கேற்றபடி மாவீரன் படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதிலும் சிவகார்த்திகேயனின் நடிப்பு அவரது ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. குறிப்பாக மாவீரன் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்டில் பேசிய அவர், இந்த முறை மிஸ் ஆகாது என்று பேசியிருந்தார். அதேபோல் படமும் ஹிட்டானது.
கமல், சிவகார்த்திகேயன்: மாவீரன் படத்தின் வெற்றிக்கு பிறகு கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் தற்போது மும்முரமாக நடந்துவருகிறது.
மீண்டும் கூட்டணி: இந்த சூழலில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாகவும் அது கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே அருண்ராஜா காமராஜ் கிரிக்கெட்டை கதைக்கருவாக வைத்து கனா படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதில் சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோல் செய்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. இதற்கிடையே சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என இசையமைப்பாளர் இமான் வைத்த குற்றச்சாட்டு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











