அட சிவகார்த்திகேயன் ஃபுல் ஃபார்ம்ல இருக்காருங்க.. அடுத்து என்ன செய்யப்போறாரு தெரியுமா?
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் மெகா ஹிட்டானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படமானது பெரிய ரெஸ்பான்ஸை பெற்றது. தற்போது அவர் இப்போது மதராஸி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார். நடிப்பு மட்டுமின்றி படங்கள் தயாரிப்பது மற்றும் படங்களை வெளியிடுவதிலும் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் புதிய படம் ஒன்றை அவர் வெளியிடவிருக்கிறார்.
கோலிவுட்டின் இப்போதைய டாப் ஹீரோக்களில் ஒருவராக வளர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் கடுமையான எதிர்ப்புகளையும் ட்ரோல்களையும் சந்தித்த அவர் இப்போது விமர்சித்தவர்களின் வாயை அடைத்திருக்கிறார். பத்து படங்களுக்குள் காணாமல் போய்விடுவார் என்று ஆரூடம் கூறியவர்கள் எல்லாம் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு அவரது வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. அவருக்கென்று பெரும் ரசிகர் பட்டாளமே உருவாகியிருக்கிறது.

அடுத்த விஜய்?: அதேபோல் விஜய் நடித்த GOAT படத்தில் எஸ்கே கேமியோ ரோல் செய்திருந்தார். அப்போது விஜய் அவரது கையில் துப்பாக்கியை கொடுத்து பேசும் வசனம் அப்படியே சிவாவுக்கு பொருந்திப்போவதாக அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள். அதற்கேற்றபடிதான் அவரின் படங்களுடைய ரிசல்ட்டும் இருக்கின்றன. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம்கூட 300 கோடி ரூபாய்வரை உலகம் முழுவதும் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் அவர்தான் இப்போதைக்கு பெரிய கமர்ஷியல் ஹீரோக்களில் ஒருவராக திகழ்கிறார்.
சிவா மட்டும்தான்: முக்கியமாக கடந்த வருடம் சூர்யா, தனுஷ் உள்ளிட்டோர் நடித்த படங்கள் எல்லாம் படுமோசமான தோல்வியை சந்தித்தன. வசூலும் பெரிதாக செய்யவில்லை. ஆனால் சிவாவோ கடந்த வருடத்தில் அமரன் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்துவிட்டார். இதனால் அவரது சம்பளமும் படுவேகமாக உயர்ந்திருக்கிறது. இப்போது அவர் தனது சம்பளமாக 50 கோடி ரூபாய்க்கும் மேல் பெறுகிறார் என்று ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த படங்கள்: அமரன் படத்தை முடித்திருக்கும் சிவகார்த்திகேயன் இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துவருகிறார்கள். படத்தின் ஷூட்டிங் மும்முரமாக இலங்கையில் நடந்துவருகிறது. இதற்கிடையே ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்திலும் நடித்து முடித்திருக்கும் எஸ்கே; அடுத்தடுத்து பல படங்களை கைகளில் வைத்திருக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.
படம் வெளியிடும் சிவா: நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பிலும் மும்முரமாக இருக்கிறார் அவர். கனா, கொட்டுக்காளி போன்ற படங்களை தயாரித்த அவர் சமீபமாக படங்களை வெளியிடுவதிலும் கவனம் செலுத்திவருகிறார். அந்தவகையில் ஹவுஸ் மேட்ஸ் என்கிற படத்தை அவர் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் வெளியிடவிருக்கிறார். அது ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியிருக்கிறது. ராஜவேல் என்பவர் இதனை எழுதி இயக்கியிருக்கிறார். படத்தை சமீபத்தில் பார்த்த அவருக்கு படம் பிடித்துவிட்டதால் தானே வெளியிட முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











