Sivakarthikeyan - சிவகார்த்திகேயன் புதிய தொழில்?.. இருக்குற கடன்ல இது தேவையா?.. ரசிகர்கள் கேள்வி
சென்னை: Sivakarthikeyan (சிவகார்த்திகேயன்) நடிகர் சிவகார்த்திகேயன் புதிய தொழில் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சின்னத்திரையில் நடந்த ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு தொகுப்பாளராக மாறி பின்னர் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன் தமிழின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இப்போது இருக்கிறார். அவருக்கென்று சிறுவர்கள், சிறுமிகள் ரசிகர் ரசிகைகளாக இருக்கின்றனர். ஆரம்பத்தில் தடுமாறிய சிவகார்த்திகேயன் போகப்போக தனது திறமையை வளர்த்துக்கொண்டார்.
100 கோடி க்ளப்பில் சிவகார்த்திகேயன்: கதை தேர்வில் கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்துக்கொண்ட அவர் அந்தப் பாதையில் சிறப்பாகவே பயணித்துவருகிறார். அந்தவகையில் அவர் நடித்த டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு படங்கள் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. சில படங்களிலேயே காணாமல் போய்விடுவார் என பலரால் கணிக்கப்பட்ட சிவகார்த்திகேயனின் இந்த அசுர வளர்ச்சி அப்படி கணித்தவர்களுக்கு அதிர்ச்சியையே கொடுத்திருக்கிறது.

பிரின்ஸ் வாங்கிய முரட்டு அடி: இப்படிப்பட்ட சூழலில்தான் அனூதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்தார். இரண்டு படங்கள் 100 கோடி கிளப்பில் இணைந்துவிட்டதால் இந்தப் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் படம் மரண அடி வாங்கியது. அதுமட்டுமின்றி ஒரு வாரத்துக்குள்ளாகவே திரையரங்குகளில் இருந்தும் படம் தூக்கப்பட்டது. பிரின்ஸ் பட தோல்வி சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகப்பெரிய தோல்வியாக கருதப்படுகிறது.
மாவீரன் சிவகார்த்திகேயன்: பிரின்ஸ் படம் கொடுத்த அடியால் தனது அடுத்த அடியை நிதானமாகவும், கவனமாகவும் எடுத்து வைக்க ஆரம்பித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதன்படி மண்டேலா படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் தற்போது நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். மாவீரன் படம் ஜூலை 14ஆம் தேதி ரிலீஸாகிறது.
புதிய தொழில்: இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் புதிய தொழில் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதாவது, ஏசியன் சினிமாஸ் என்ற நிறுவனத்துடன் இனைந்து ASK (ஏசியன் சிவகார்த்திகேயன்) சினிமாஸ் என்று சென்னையில் திரையரங்குகள் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.
இதெல்லாம் தேவையா?: இந்தத் தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்களை குஷிப்படுத்தினாலும் ஏற்கனவே அவருக்கு 60 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் என்ற ஒரு தகவல் பல காலமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் இருக்கும் கடனில் இந்தத் தொழில் தேவைதானா முதலில் கடனை அடைத்துவிட்டால் நல்லதுதானே என எஸ்கே ரசிகர்கள் அக்கறையுடன் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications