Don't Miss!
- Technology
சூப்பர் மொபைல் பாதுகாப்பிற்கு மேட் இன் இந்தியா BharOS.! இனி Android, iOS ஓடிடனும்.!
- News
ஈரோடு கிழக்கில் பாஜக போட்டியிட்டால் விட்டுக் கொடுக்க ரெடி! ஓபிஎஸ் தடாலடி அறிவிப்பு
- Lifestyle
ஆண்கள் மனைவியை தவிர்த்து வேறு பெண்ணை விரும்ப சாணக்கியர் கூறும் காரணங்கள் என்ன தெரியுமா?
- Automobiles
கொள்ளை அழகு... இந்த கார்கள் மட்டும் சாலைக்கு வந்துச்சு எல்லாரோட கண்களும் அது மேலதான் இருக்கும்...
- Sports
காவ்யா மாறன் அழகில் மயங்கிய வெளிநாட்டு ஆண்கள்.. கல்யாணம் பண்ணிக்குங்க என கெஞ்சல்.. வீடியோ
- Finance
முகேஷ் அம்பானி காட்டில் பண மழை.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் Q3ல் ரூ.15,792 கோடி லாபம்..!
- Travel
சென்னையிலிருந்து திருப்பதி – தரிசன டிக்கெட் முன்பதிவு, பயணச் செலவுகள், தங்குமிடம் புக்கிங் – இதர தகவல்கள்!
- Education
TNPSC Road inspector Recruitment 2023:சிவில் டிராட்மென்ஷிப் சான்றிதழ் இருந்தால் 716 பேருக்கு வாய்ப்பு..!
அருண் விஜய் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்... சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி?
சென்னை : நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்னவ் விஜய். சமீபத்தில் இவரது நடிப்பில் ஓ மை டாக் என்ற படம் ரிலீசானது. இந்தப் படத்தில் விஜய்குமார், அருண் விஜய் மற்றும் ஆர்னவ் விஜய் என மூன்று தலைமுறை நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர். ஆர்னவ் விஜய்யின் நடிப்பு இந்தப் படத்தில் பெரிதும் பாராட்டுக்கு உள்ளானது.
ஏகே
62
வில்
தோனி
ஸ்டைலில்
வேலை
செய்வேன்...
அப்படி
என்ன
செய்ய
போகிறார்
விக்னேஷ்
சிவன்
?

நடிகர் அருண் விஜய்
நடிகர் அருண் விஜய் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவரது யானை படம் ஹரி இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ளது. படத்தில் பிரியா பவானி சங்கர் அருண் விஜய்க்கு ஜோடி சேர்ந்துள்ளார். படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

மகன், அப்பாவுடன் அருண் விஜய்
இந்நிலையில் சமீபத்தில் இவர் தனது மகன் ஆர்னவ் மற்றும் அப்பா விஜய்குமாருடன் இணைந்து நடித்திருந்த ஓ மை டாக் படம் நேரடியாக அமேசான் ஓடிடியில் வெளியானது. இந்தப் படத்தில் ஆர்னவ்விற்கு சிறப்பான கேரக்டர் இருந்த நிலையில், அவர் இந்தப் படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மகனின் நடிப்பு ஆர்வம்
இந்தப் படம் சூர்யாவின் 2டி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்க்கப்பட்ட நிலையில், இந்தப் படம் தானாக அமைந்தது என்றும் இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படம் என்றும் முன்னதாக அருண் விஜய் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். தனது மகனின் நடிப்பு ஆர்வத்தை புரிந்துக் கொண்ட தான் இந்தப் படத்தில் அவர் நடிக்க உதவி செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்னவிற்கு பாராட்டு
படத்தில் ஆர்னவ் மற்றும் நாய் ஒன்று சிறப்பாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் ஆர்னவ் தன்னுடன் நடித்ததை காட்டிலும் அவரது தாத்தா விஜய்குமாருடன் சிறப்பாக நடித்துள்ளதாகவும் அருண் விஜய் தெரிவித்திருந்தார். அறிமுகப் படம்போல இல்லாமல் ஆர்னவின் நடிப்பு இந்தப் படத்தில் பெரிதும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

சிவகார்த்திகேயன் பிறந்தநாள் வாழ்த்து
இன்றைய தினம் ஆர்னவ் தனது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இதையொட்டி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஆர்னவிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஆர்னவின் ஓ மை டாக் படத்தை தான் மிகவும் ரசித்ததாக அவர் கூறியுள்ளார்.
Recommended Video

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
மேலும் ஆர்னவின் படிப்பு மற்றும் கேரியர் சிறப்பாக அமையும் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னதாக சிவகார்த்திகேயன் மற்றும் அருண் விஜய் இடையில் சர்ச்சைகள் காணப்பட்ட நிலையில், ஆர்னவ் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதன்மூலம் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

அருண் விஜய் பதில்
இந்நிலையில் இந்த வாழ்த்திற்கு அருண் விஜய் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்து பதில் ட்வீட்டை பதிவு செய்துள்ளார். மேலும் தான் இந்த பிறந்தநாள் வாழ்த்தை ஆர்னவிற்கு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். முன்னதாக தன்னுடைய மகனின் பிறந்தநாள் குறித்து அவர் காலையிலேயே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.