அட்லி-பிரியாவுக்கு டிவிட்டரில் வாழ்த்து சொன்ன சிவகார்த்திக்கேயன்
ராஜா ராணி இயக்குநர் அட்லி தனது நீண்ட நாள் தோழி பிரியாவை தற்போது காதலித்து கரம் பிடித்துள்ளார். இவர்களின் நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றது. திரை உலகப் பிரபலங்கள் பலரும் இந்த திருமண நிச்சயத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் அட்லியின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திக்கேயன் இந்த திருமண நிச்சயத்திற்கு டிவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளார்.

தன்னால் நேரில் வர இயலாத காரணத்தால் டிவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளதாக கூறியுள்ளார்.
சிவகார்த்திக்கேயனுடன் நட்பு
ஷங்கரின் உதவியாளராக இருந்து இயக்குனரானவர் அட்லி. ராஜா ராணி என்ற ஒரு படத்திலேயே பிரபலமடைந்தார். இதற்கு காரணம் சிவகார்த்திக்கேயன்தான் என்று விஜய் டிவி விருது விழாவிலேயே அறிவித்தார்.
ஹிட்டுக்குப் பின் திருமணம்
ஒரு ஹிட்டுக்கு பிறகு திருமணம் என்கிற அறிமுக இயக்குனர்கள் பாணியில் அட்லீயும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.
அவர் மணக்க இருப்பது சின்னத்திரை நடிகை ப்ரியாவை.
சீரியலில் அறிமுகம்
ப்ரியா கனா காணும் காலங்கள் உள்ளிட்ட பல சின்னத்திரை சீரியல்களில் நடித்துள்ளார். அதோடு நான் மகான் அல்ல படத்திலும் சிங்கம், சிங்கம் 2 படத்திலும் தங்கையாவும் நடித்துள்ளார்.
என் நிஜ ராணி
பல வருடங்களாக நட்பாக பழகியுள்ளனர். இது காதலாகி தற்போது திருமண நிச்சயத்தில்முடிந்துள்ளது. நான் எனது நிஜ ராணியை திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன் என்று அட்லி கூறியுள்ளார்.
நட்பு காதலாகியது
ப்ரியாவை கடந்த 8 வருடங்களாக அறிவேன். நண்பர்களாக இருந்தோம், இப்போது காதலிக்கிறோம். நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். நவம்பர் மாதம் திருமணம் நடக்கிறது என்கிறார் அட்லீ.


Click it and Unblock the Notifications











