Sivakarthikeyan: வேற லெவல்! அக்காவுக்கு மினி கூப்பர் காரை பரிசாக வழங்கிய S.K.. ஒரே பாசமழைதான் போங்க!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், சின்னத்திரையில் தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் தவிர்க்க முடியாத நடிகராக உள்ளார். கடைசியாக எனது நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது. தீபாவளிக்கு ரிலீசான படம் இப்போதும் திரையரங்கில் ஓடிக் கொண்டுள்ளது. சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு அவரது ரசிகர்கள் மட்டும் இல்லாமல் பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

சிவகார்த்திகேயனை பொறுத்தவரையில் தனது குடும்பத்துடன் எப்போதும் நெருக்கமாக இருப்பவர். அண்மையில் அளித்த பேட்டியில் கூட தான் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலக முடிவு எடுத்ததாகவும், அப்போது தனது மனைவி தான் தன்னை தொடர்ந்து சினிமாவில் இருக்கும்படி ஊக்குவித்ததாகவும் தெரிவித்திருந்தார். இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

sivakarthikeyan amaran

சிவகார்த்திகேயன் தனது முறைப்பெண்ணான ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். மேலும் அவர்களுக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23 வது படத்தில் நடித்து வருகின்றார். தனது 24 வது படத்திற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றார். படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் பாடல் எழுதுவது பாடல்கள் பாடுவது படங்கள் தயாரிப்பது என ஒரு முழு சினிமாக்காரராகவே சிவகார்த்திகேயன் வலம் வருகிறார். இவரை தயாரிப்பில் வெளியான கொட்டுக்காளி திரைப்படம் இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆல்டர்னேட்டிவ் திரைப்பட விழாவில் விருது வென்றது. இது மட்டும் இல்லாமல் இத்தனை படம் பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.

அக்கா: சிவகார்த்திகேயன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் அவர் தனது அக்கா குறித்து மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் பதிவிட்டுள்ளார். அதாவது," எனது மிகப் பெரிய உத்வேகமான எனது அக்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அக்கா நீ குழந்தை பெற்ற பின்னரும் உனது முப்பத்தி எட்டாவது வயதில் மருத்துவத்துறையில் எம்டி பட்டம் பெற்றாய். இது மட்டும் இல்லாமல் உனது 42 வது வயதில் தங்கப் பதக்கத்துடன் மெரிட்டில்,எஃப்.ஆர்.சி.பி படிப்பினையும் முடித்தாய்.

sivakarthikeyan amaran

நெகிழ்ச்சி: உன்னை நினைத்து உண்மையிலேயே அப்பா பெருமைப்படுவார். மீண்டும் ஒருமுறை பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா. உனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் அத்தானுக்கு எனது நன்றிகள்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அக்காவுக்கு பிறந்த நாள் பரிசாக மினி கூப்பர் கார் வாங்கிக் கொடுத்துள்ளார். சிவகார்த்திகேயனின் இந்தப் பதிவு ரசிகர்களை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

sivakarthikeyan amaran

கேள்வி: அதேநேரத்தில் ரசிகர்கள் மத்தியில் நேற்றில் இருந்து ஒரு தகவல் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது. அதாவது, சிவகார்த்திகேயனின் 25வது படத்தினை சுதா கொங்காரா இயக்குவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இப்படியான நிலையில் படத்திற்காக லுக் டெஸ்ட் சில தினங்களுக்கு முன் நடைபெற்றதாகவும், அப்போது சுதா கொங்கரா மிகவும் ஆத்திரப்பட்டு, சிவகார்த்திகேயனை திட்டிவிட்டதாகவும் தகவல் வெளியானது. இதனால் இந்தப் படம் நடக்குமா நடக்காதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X