ரொம்ப சந்தோஷம் நெல்சன் அண்ணா.. தளபதி 65 இயக்குநருக்கு வேற மாறி வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்!

சென்னை: நடிகர் விஜய்யின் 'தளபதி 65' படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குநர் நெல்சனுக்கு கிடைத்துள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன், நெல்சனை 'வேற மாறி' வாழ்த்தி உள்ளார்.

எதிர்பார்த்தபடியே சன் பிக்சர்ஸ் தான் தளபதி 65 படத்தை தயாரிக்க உள்ளது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

தளபதி 65 படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியானதும், முதல் ஆளாக சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் வேலை

விஜய் டிவியில் வேலை

சிவகார்த்திகேயனை போலவே விஜய் டிவியில் பணியாற்றி சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் தான் நெல்சன் திலிப்குமார். ஒல்லி பெல்லி, ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் மற்றும் பிக் பாஸ் என ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்களில் பணியாற்றியுள்ளார். விஜய் டிவியில் பணியாற்றும் போதே சிவகார்த்திகேயனுக்கும் இவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

வேட்டை மன்னன்

வேட்டை மன்னன்

நடிகர் சிம்பு, ஹன்சிகா நடிப்பில் வேட்டை மன்னன் படத்தை இயக்க திட்டமிட்டு இயக்குநராக அறிமுகமாக நெல்சன் முயற்சி செய்தார். டீசர் எல்லாம் வெளியான நிலையில், படம் அப்படியே வேறு சில காரணங்களுக்காக டிராப் ஆனது. அதன் பின்னர், நீண்ட நாட்கள் போராட்டத்திற்கு பிறகு நயன்தாராவின் படம் கிடைத்தது.

நயன்தாராவை வைத்து

நயன்தாராவை வைத்து

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை லீடு ரோலில் வைத்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய டார்க் காமெடி திரைப்படம் கோலமாவு கோகிலா மிகப்பெரிய ரெஸ்பான்ஸை திரைத்துறையிலும் ரசிகர்கள் மத்தியிலும் அள்ளியது. அந்த படத்தில் பிரபலமான "எனக்கு கல்யாண வயசு தான் வந்துடுச்சுடி" பாடலை சிவகார்த்திகேயன் எழுதியது இருவரது நட்பை வெளிக்காட்டியது.

Recommended Video

Thalapathy Vijay Selfie ! ட்விட்டரில் மாஸ் காட்டிய விஜய்யின் Selfie
சிவகார்த்திகேயனின் டாக்டர்

சிவகார்த்திகேயனின் டாக்டர்

கோலமாவு கோகிலா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படத்தை இயக்கி முடித்துள்ளார் நெல்சன். அனிருத் இசையில் அந்த படத்தில் இடம்பெற்ற "செல்லம்மா.. செல்லம்மா" பாடலையும் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். அதன் மேக்கிங் வீடியோ வேற மாறி வைரலானது.

சிவகார்த்திகேயன் வாழ்த்து

இந்நிலையில், நெல்சன் திலீப்குமார் தளபதி விஜய்யின் 65வது படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ள சந்தோஷ செய்தியை கேட்ட சிவகார்த்திகேயன், முதல் ஆளாக தனது வாழ்த்துக்களை தனது நண்பரும் இயக்குநருமான நெல்சனுக்கு தெரிவித்துள்ளார். பெரிய பெயர்கள் கூட வேலை செய்ய வேண்டும் என்கிற உங்களின் பெரிய கனவு நனவாகி உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X