சிவகார்த்திகேயன் சமந்தா டூயட்.. பிரேக்கில் கிரிக்கெட்.. ஜாலியான #SK12 ஷூட்டிங் ஸ்பாட்!
Recommended Video

சென்னை : மோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாராவுடன் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'வேலைக்காரன்' படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் அடுத்து பொன்ராம் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
இன்னும் பெயரிடப்படாத பொன்ராம் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். திருமணத்திற்கு பின்பு செம க்யூட்டாக தாவணியில் நடித்து வருகிறார் சமந்தா.
ஏற்கெனவே, சிவகார்த்திகேயன் - பொன்ராம் காம்போவில் ரிலீஸான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மற்றும் 'ரஜினி முருகன்' ஆகிய படங்கள் ஹிட்டானதை அடுத்து இது மூன்றாவது படமாகும்.

பொன்ராம் படம்
இந்தப் படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை 2018 பிப்ரவரி 17-ம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இப்படத்திற்கென சமந்தா பிரத்யேகமாக சிலம்பாட்டப் பயிற்சி கற்றுக்கொண்டார்.

சிம்ரன் நடிக்கிறார்
இந்தப் படத்தில் சூரி, நெப்போலியன், சிம்ரன், லால், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, யோகி பாபு என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. டி.இமான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.

மூன்றாவது கட்ட ஷூட்டிங்
24 AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். ஏற்கெனவே, பாதிக்கு மேலான ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், தற்போது படத்தின் 3-ஆம் கட்ட படப்பிடிப்பு நவம்பர் 20-ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.

லேட்டஸ்ட் வீடியோ
குற்றாலம், தென்காசி பகுதிகளில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இரவு நேரத்தில் நடந்த ஷூட்டிங் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், சிவகார்த்திகேயனும், நீல நிற தாவணியில் சமந்தாவும் நடிக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
கிரிக்கெட் விளையாடிய படக்குழுவினர்
ஷூட்டிங் இல்லாத இரவு நேரங்களில், ரெசார்ட்டுக்கு அருகே, சிவா, சூரி உள்ளிட்ட படக்குழுவினர் கிரிக்கெட் விளையாடியதை வீடியோவாக எடுத்து சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். இந்த வீடியோவும் வைரலாகப் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











