வசூலில் விஜய்யை வீழ்த்திட்டாரா அமரன் சிவகார்த்திகேயன்?..யப்பா எஸ்கே வேற லெவல் கெத்து காண்பிக்கிறாரே
சென்னை: சிவகார்த்திகேயனின் நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளியானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்த அந்தப் படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. படத்துக்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்திருக்கிறார்கள். வசூலிலும் சரி, விமர்சன ரீதியாகவும் சரி படம் சக்கைப்போடு போட்டுவருகிறது. இந்தச் சூழலில் விஜய் ரசிகர்களுக்கும், எஸ்கே ரசிகர்களுக்கும் புது சண்டை ஒன்று பிறந்திருக்கிறது.
சிவகார்த்திகேயனின் வளர்ச்சி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. சிலரை அச்சப்படுத்தியிருக்கிறது. தனது வளர்ச்சியின் அடுத்தக்கட்ட பாய்ச்சலாக அமரனை கொடுத்திருக்கிறார் அவர். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் அந்தப் படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்தார். இந்திய ராணுவத்தில் பணியாற்றி தீவிரவாதிகளுடனான சண்டையின்போது உயிர் நீத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி படம் உருவாகியிருந்தது.

எப்படி இருக்கு படம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31ஆம் தேதி படம் ரிலீஸானது. இப்படத்துக்கு முன்னதாக எஸ்கே நடிப்பில் வெளியான அயலான், மாவீரன் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் என்பதால் இப்படத்தின் மீதும் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்திருப்பதாகவே ரசிகர்கள் கூறினார்கள். ராணுவ ஜானரில் வந்த படங்களில் இப்படம் கொஞ்சம் வித்தியாசப்படுவதாகவும்; சண்டை காட்சிகளைவிடவும் காதல் காட்சிகள் கலங்கடித்துவிட்டதாகவும் கருத்து தெரிவித்தனர்.
சிவா, சாய் பல்லவி: படத்தின் இரண்டு தூண்களாக தாங்கியிருப்பது சிவகார்த்திகேயனும், சாய் பல்லவியும்தான். ராணுவ அதிகாரியாக மிடுக்கோடு சிவகார்த்திகேயன் வரும் காட்சிகளும் பேசும் வசனங்களும் புது எனர்ஜியை ஊட்டின. கண்டிப்பாக இந்தப் படம் அவரது கரியரில் முக்கியமான படம்தான். சாய் பல்லவியை பற்றி சொல்லவே வேண்டாம். சின்ன கேப் கிடைத்தாலும் சிக்சர் அடிக்கும் அவர்; அமரனில் அடித்தது எல்லாமே சிக்சர்தான். சொல்லப்போனால் சிவகார்த்திகேயனைவிடவும் ஒருபடி மேலேதான் நின்றார் சாய் பல்லவி.
வசூலில் மிரட்டும் அமரன்: படத்துக்கு விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. ரஜினிகாந்த் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் எல்லோரும் பார்க்க வேண்டிய படம் என்று பாராட்டு பத்திரம் வாசித்தார். அதேபோல் படத்தின் தயாரிப்பாளரான கமல் ஹாசனும் மிகப்பெரிய பாராட்டை கொடுத்தார். இந்தச் சூழலில் வசூல் ரீதியாகவும் படம் பட்டையை கிளப்புகிறது. இதுவரை படமானது உலக அளவில் 140 கோடி ரூபாய்வரைக்கும் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.
விஜய்யை ஓய்த்த சிவகார்த்திகேயன்?: இந்நிலையில் சமூக வலைதளங்களில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் விஜய் நடித்த GOAT படத்தைவிடவும் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் வசூலில் முந்தியிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது கோட் படம் மொத்தமே ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 18 கோடி ரூபாயைத்தான் வசூலித்தது. அதேசமயம் அமரன் வெளியான ஆறு நாட்களில் அந்த மாநிலங்களில் 19 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறதாம். போகப்போக இந்த வசூல் அதிகரிக்கும் என்றே கருதப்படுகிறது.
ஆரம்பித்த சண்டை: இந்த டேட்டாவை எடுத்த ரசிகர்கள் வெளி மாநிலங்களில் விஜய்யின் வசூலை சிவகார்த்திகேயன் ஓய்க்க ஆரம்பித்துவிட்டார். மேலும் விஜய் தன்னிடம் கொடுத்த துப்பாக்கியை வைத்தே அவரை வசூலில் சுட்டு வீழ்த்திவிட்டார் என்று எஸ்கே ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கு விஜய் ரசிகர்களும் பதிலடி கொடுக்க ஆரம்பித்திருப்பதால் புதிய பஞ்சாயத்து ஒன்று சோஷியல் மீடியாவில் ஆரம்பித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











