Exclusive: ராணுவ வீரராகவே வாழ்ந்தாரு.. அவருக்காக ஒரு வாரம் சாப்பிடல.. அமரன் பட அனுபவம் சொன்ன உமைர்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி லீட் கேரக்டரில் நடித்துள்ள அமரன் படம் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த மாதம் 31ம் தேதி தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகி உள்ளது. மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்காக அமரன் படத்தின் கதைக்களத்தை ராஜ்குமார் பெரியசாமி உருவாக்கியுள்ளார்.
மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயனும் அவரது மனைவி இந்து ரெபெக்கா வர்கிஸாக சாய் பல்லவியும் இந்த படத்தில் வாழ்ந்துள்ளதாக பாராட்டுக்களும் விமர்சனங்களும் குவிந்து வருகின்றன, இந்த படத்தில் வஹித்தாக நடித்த நடிகர் உமைர் சிவகார்த்திகேயன் குறித்தும் அமரன் படம் குறித்தும் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

அமரன் படம்: நடிகர் சிவகார்த்திகேயன். சாய் பல்லவி லீட் கேரக்டர்களில் நடித்துள்ள அமரன் படம் கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளி கொண்டாட்டமாக ரிலீசாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி தவிர்த்து மற்ற நடிகர்கள் பெரும்பாலும் இந்த படத்தின் அறிமுக நடிகர்களாகவே நடித்துள்ளனர். இதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து செயல்படும் வஹித்தாக நடிகர் உமைர் நடித்துள்ளார். இந்த கேரக்டர் படத்தில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தது. சிறு கேரக்டராக இருந்த போதிலும் சிவகார்த்திகேயனுக்கு உதவி செய்ததற்காக வில்லன்களிடம் மாட்டி பிறகு சிவகார்த்திகேயனால் காப்பாற்றப்படுபவராக உமைர் நடித்திருந்தார்.

காஷ்மீரை சேர்ந்த நடிகர் உமைர்: இவர் காஷ்மீரை சேர்ந்தவர். அங்கேயே இவரை செலக்ட் செய்து ராஜ்குமார் பெரியசாமி நடிக்க வைத்துள்ளார். ஏறக்குறைய 80 நாட்கள் காஷ்மீரில் அமரன் படத்தின் ஷூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராணுவத்தை மையமாகக் கொண்டு பல காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. சாய் பல்லவி உடனான காதல் மற்றும் ராணுவத்தின் மீதான காதல் என இரண்டையும் பேலன்ஸ் செய்து இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். தன்னை நம்பி வஹித் தனக்காக, தான் வந்து காப்பாற்றுவேன் என்று நினைத்து காத்திருப்பான் என்று முகுந்த் வரதராஜன் கூறுவதாக இந்த படத்தின் காட்சிகள் அமைந்திருந்தன.

ராணுவ வீரராக மாறிய சிவகார்த்திகேயன்: தொடர்ந்து அவர் வஹித்தை வில்லன்களிடமிருந்து காப்பாற்றி தூக்கிக் கொண்டு ஓடி வருவதாகவும் இந்த படத்தின் காட்சிகள் அமைந்திருக்கும். ஒரு கையில் துப்பாக்கி மற்றும் ஒரு கையில் வஹித்தை தூக்கிக்கொண்டு சிவகார்த்திகேயன் ஓடி வருவார். இந்நிலையில் தற்போது filmibeat tamilக்காக எக்ஸ்க்ளூசிவ்வாக உமைர் கொடுத்துள்ள பேட்டியில், அமரன் படத்தின் பல்வேறு அனுபவங்களை பேசியுள்ளார். இந்தப் படத்தின் பல காட்சிகளில் நிஜ ராணுவ வீரராகவே சிவகார்த்திகேயன் மாறிவிட்டதாக அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க தன்னை தேர்ந்தெடுத்த போது ராஜ்குமார் பெரியசாமி அந்த நிஜ கேரக்டரின் வீடியோவை தனக்கு போட்டுக் காட்டியதாக அவர் கூறியுள்ளார்.
3 மாதங்கள் சிரமம்: ஆனால் ஒரு மாடலான தனக்கு அந்த கேரக்டர் செட்டாகாது என்று தான் நினைத்ததாகவும் ஆனால் ராஜ்குமார் பெரியசாமி இந்த கேரக்டர் கண்டிப்பாக தனக்கு செட் ஆகும் என்று கூறியதாகவும் அவர் உற்சாகம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த கேரக்டருக்காக தான் 71 கிலோவில் இருந்து 83 கிலோவிற்கு தன்னுடைய எடையை உயர்த்தியதாகவும் ஆர்மி உடல் கட்டை கொண்டுவரும் வகையில் மூன்று மாதங்கள் தொடர்ந்து அதிகமாக சாப்பிட்டு ஜிம்மிற்கு சென்று தன்னுடைய பிட்னசை சரி செய்ததாகவும் உமைர் தெரிவித்துள்ளார். ஆனால் மீண்டும் தன்னுடைய உடல் எடையை தான் ஒரு வாரம் பட்டினி இருந்து குறைத்ததாகவும் உமைர் கூறியுள்ளார்.
பட்டினி கிடந்த உமைர்: சிவகார்த்திகேயன் உடனான அந்த காட்சியில் அவர் தன்னை தூக்கி கொண்டு ஓடி வர வேண்டுமே என்பதற்காக தான் தன்னுடைய உடல் எடையை மீண்டும் குறைக்க முயற்சித்ததாகவும் ஒரு வாரம் தான் தொடர்ந்து இந்த காட்சிக்காக சாப்பிடாமல் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் சிவகார்த்திகேயன் தன்னை தூக்கி வருவது சரியாக நடந்ததாகவும் அந்த காட்சிக்கு தன்னுடைய முகத்தில் தேவையான சோர்வையும் இந்த பட்டினி தனக்கு கொடுத்ததாகவும் உமைர் மேலும் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ள உமைர் முன்னதாக அவரது நடிப்பில் வெளியான டான், ரெமோ படங்களும் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











