Sivakarthikeyan: அமரன் பட ரொமான்ஸ் பாடல்.. அதிரடியாக தயாராகும் சிவகார்த்திகேயன் & சாய் பல்லவி

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு மாவீரன் மற்றும் கடந்த ஜனவரி மாதத்தில் அயலான் படங்கள் வெளியாகி மாஸ் காட்டிய நிலையில் தற்போது அமரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் இன்னும் பத்து நாட்கள் மீதம் இருப்பதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காஷ்மீரில் மூன்று மாதங்கள் இந்த படத்தின் சூட்டிங் எடுக்கப்பட்டது. தொடர்ந்து சென்னை, பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும் படத்தின் சூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் இன்னும் சில தினங்களில் மீதமுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்த வாரத்தில் படத்தின் சூட்டிங் மீண்டும் துவங்கப்பட உள்ளதாகவும் தொடர்ந்து சில தினங்கள் நடத்தப்பட்டு படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கையும் படக்குழுவினர் நிறைவு செய்யவுள்ளதாகவும் படம் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் துவங்க உள்ள படத்தின் ஷூட்டிங்கில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இணைந்து ரொமான்ஸ் பாடலில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக அமைந்துள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

Sivakarthikeyans Amaran movie song shoot to be plan next week in chennai

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து வெற்றிப்பட இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்து படங்களை கொடுத்து வருகிறார். தயாரிப்பாளராகவும் தன்னுடைய சிறப்பான பயணத்தை தொடர்ந்து வருகிறார். கடந்த ஆண்டில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் கூட்டணியில் வெளியான மாவீரன் படம் மற்றும் கடந்த ஜனவரியில் பொங்கலையொட்டி வெளியான அயலான் படங்கள் சிவகார்த்திகேயனுக்கு சிறப்பாக அமைந்தன. தற்போது அவரது அமரன் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. இன்னும் பத்து நாட்கள் ஷூட்டிங் மட்டுமே பாக்கி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அமரன் படம்: இந்நிலையில் தன்னுடைய ஏகே 23 படத்தின் ஷூட்டிங்கில் ஏஆர் முருகதாசுடன் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதனிடையே அடுத்த வாரத்தில் அமரன் படத்தின் மீதமுள்ள ஷூட்டிங்கில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இணையுள்ளனர். படத்தின் பாடல் காட்சியை சென்னையில் எடுக்க இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி திட்டமிட்டுள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மனைவியாக சாய்பல்லவி நடித்து வருகிறார். இவர்கள் இருவரிடையே காதல் பாடல் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அது வேற லெவலில் இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பாடல் காட்சி சூட்டிங்: படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில் இந்த படத்தின் பாடல் காட்சிகள் உள்ளிட்ட பேட்ச் ஒர்க் வேலைகள் இந்த மாதத்திற்குள் நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூட்டிங் சென்னையிலேயே நடக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை சாய் பல்லவி சிறப்பான நடனத்தை தொடர்ந்து கொடுத்து வருகிறார். சிவகார்த்திகேயனும் டான்ஸ் மூவ்மெண்ட்களை ரசிகர்களை கவரும்வகையில் கொடுத்துவரும் நிலையில் இந்தப் பாடல் அதிரடி கிளப்பும் என்று எதிர்பார்க்கலாம். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்து வரும் இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்த படங்கள்: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் அமரன் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் ராணுவ வீரராகவும் பொறுப்பான குடும்பத் தலைவரும் மற்றொரு வெளியிடப்படாத கெட்டப்பிலும் சிவகார்த்திகேயன் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளன. மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம் சிவகார்த்திகேயன் கேரியரில் சிறப்பாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X