சிவகார்த்திகேயனின் அமரன் எப்போ ரிலீஸ் தெரியுமா?.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: சிவகார்த்திகேயன் இப்போது அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். முகுந்த வரதராஜன் என்ற ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாறுதான் அந்தப் படம். ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல் ஹாசன் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்தார் சிவா. அந்தப் படத்தின் ஷூட்டிங்கும் முடிவடையும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அமரன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு வெள்ளித்திரையில் நுழைந்த சிவகார்த்திகேயன் இப்போது கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவர். அவரது படங்கள் மினிமம் கியாரண்டி என்ற உறுதி இருப்பதாலும், வியாபாரமும் கையை கடிக்காமல் நடப்பதாலும் அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் வரிசையில் இருக்கிறார்கள். மேலும் இப்போது சிறுவர்கள், சிறுமிகள் மத்தியில் சிவகார்த்திகேயன் டாப்பில் இருக்கிறார். எனவே இயக்குநர்களும் சிவாவை வைத்து படம் எடுக்க விரும்புகிறார்கள்.

Sivakarthikeyan Amaran

அடுத்த விஜய்: விஜய் எப்படி சிறுவர்கள் சிறுமிகளை கவர்ந்து குடும்ப ரசிகர்களையும் கவர்ந்தாரோ அதே ஃபார்முலாவில்தான் சிவாவும் இப்போது பயணமாகிக்கொண்டிருக்கிறார். விஜய்யும் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு அரசியலில் முழு கவனம் செலுத்தவிருப்பதால் அவரது இடத்தை கண்டிப்பாக எஸ்கேதான் பிடிப்பார் என்று அவரது ரசிகர்கள் இப்போதே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கேற்றபடிதான் அவரது படங்களின் ரிசல்ட்டும், வசூலும் இருக்கின்றன என்றும் சில குரல்கள் கேட்கின்றன.

வரிசை ஹிட்டுகள்: மேலும் சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த அயலான், மாவீரன் ஆகிய இரண்டு படங்களுமே அவருக்கு மிகச்சிறந்த வெற்றியை பெற்றுக்கொடுத்தன. அதிலும் அயலான் படம் கால தாமதமாக ரிலீஸ் ஆனாலும் ஏலியன் சப்ஜெக்ட்டை வைத்து படம் உருவாகியிருந்ததால் சிறுவர்கள் மற்றும் சிறுமியை வெகுவாகவே கவர்ந்துவிட்டது. அதுமட்டுமின்றி போட்டியாக களமிறங்கிய கேப்டன் மில்லர் படத்தைவிடவும் அயலான் படமே அதிகம் வசூலித்ததாக சொல்லப்பட்டது.

அமரன்: வரிசையாக இரண்டு ஹிட்டுகளை கொடுத்த கையோடு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். கமல் ஹாசன் தயாரிக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் சிவாவுக்கு ஹாட்ரிக் வெற்றியை பரிசளிக்கும். ஏனெனில் ரங்கூன் படத்தின் மூலமே ராஜ்குமார் பெரியசாமி தான் ஒரு நல்ல இயக்குநர் என்பதை நிரூபித்துவிட்டார். அதன் காரண்மாக இந்தப் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.

அமரன் ரிலீஸ்: முன்னாள் இந்திய இராணுவ வீரர் முகுந்த் வரத்ராஜனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இந்நிலையில் அமரன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி படமானது தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. முன்னதாக வேட்டையன் படத்துக்கு போட்டியாக அமரன் ரிலீஸாகலாம் என்ற பேச்சு எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X