Ayalaan Box Office: அடித்து நொறுக்கிய அயலான்.. நான்காம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12ந் தேதி வெள்ளிக்கிழமை வெளிவந்த படங்களில் ஒன்று அயலான். இன்று நேற்று நாளை படத்திற்கு பின் இயக்குனர் ரவிக்குமாரின் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தின் நான்காம் நாள் வசூல் குறித்து இப்போது பார்க்கலாம்.
சத்யஜோதி தியாகராஜன் தயாரித்த இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர் .ஏலியனை மையமாக கொண்டு உருவாகி உள்ள இப்பட்டம் கிட்டத்தட்ட ஆறு ஆண்டு போராட்டத்திற்கு பின் வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயனின் அயலான்: சயின்டிபிக் திரைப்படமாக உருவாகி உள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் இயற்கையையும் விலங்குகளையும் விரும்பும் நபராக நடித்து இருக்கிறார். கொடைக்கானலில் இயற்கை விவசாயம் செய்து வரும் இவர் அதில் தோல்வி அடைய, வேலை தேடி சென்னைக்கு வருகிறார். அப்போது வேற்று கிரகத்தில் இருந்து விழுந்த அரிதான கனிமத்தை பயன்படுத்தி மனித இனத்துக்கு கேடு செய்யும் திட்டத்தை தொடங்குகிறான் வில்லன். அந்த கனிம பொருளை தேடி ஏலியன் ஒன்று பூமிக்கு வந்து சிவகார்த்திகேயனோடு நட்பாக பழகுகிறது.
படத்தின் கதை: மேலும், மனிதனுக்கு ஆபத்தை விளைவிக்கும் இந்த கனிம திட்டத்தை ஏலியன் தடுக்க நினைப்பதால் வில்லனால் ஏலியனுக்கு ஆபத்து வருகிறது. ஏலியனை காப்பாற்றவும், வில்லன் சதித்திட்டத்தை முறியடிக்கவும் சிவகா ர்த்திகேயன் போராடுகிறார். ஆனால், இறுதியில் என்ன ஆனது என்பது தான் அயலான் படத்தின் கதை. இப்படத்தில் சிவகார்த்திகேயன் எந்தவிதமான ஹீரோயிசமும் இல்லாமல் நிதானமாக நடித்து இருக்கிறார். அம்மா பாசம், காதலியுடன் ரொமான்ஸ், வில்லனுடன் சண்டை என படத்தில் அனைத்தும் இருக்கு என படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நான்காம் நாள் வசூல்: இந்நிலையில் அயலான் படத்தின் நான்காம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அயலான் படம் முதல் நாளில் 3.2 கோடி ரூபாய் வசூலானது. அதேபோல், இரண்டாவது நாள் 4.35 கோடி ரூபாயும், மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை 5.15 கோடியை வசூலித்தது. நான்காம் நாளான நேற்று அயலான் படம் 6.75 கோடி வசூலை அள்ளி உள்ளது. படம் வெளியான முதல் நாளில் படத்தின் வசூல் குறைவாக இருந்த நிலையில், படிப்படியாக அயலான் படத்தின் வசூல் அதிகரித்து வருகிறது.
இதனடிப்படையில் நான்கு நாட்களில் படத்தின் மொத்த வசூல், 19.45 கோடியாக அதிகரித்துள்ளது. அடுத்து வரும் நாட்களும் விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில கலவையான விமர்சனங்கள் இப்படத்தின் மீது இருந்தாலும் கூட, குடும்ப ரசிகர்களுக்கு இப்படம் பிடித்துவிட்டது. குறிப்பாக குழந்தைகள் அயலான் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











