Ayalaan Teaser - என்ன ஏலியன் ஏ.ஆர்.ரஹ்மான் பாட்டெல்லாம் கேட்குது.. வெளியானது அயலான் படத்தின் டீசர்

சென்னை: Ayalaan Teaser (அயலான் டீசர்) சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் அயலான் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது.

சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்திருந்த படம் மாவீரன். மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதற்கு அடுத்ததாக கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அந்தப் படத்துக்காக உடலை ஏற்றி வேற லுக்கில் இருக்கும் சிவாவின் புகைப்படம் சமீபத்தில் ட்ரெண்டானது.

Sivakarthikeyans Ayalaan Movies Teaser is Out Now

அயலான்: இதற்கிடையே பல வருடங்களுக்கு முன்பே அயலான் படத்தில் நடிக்க ஆரம்பித்தார் சிவகார்த்திகேயன். இன்று நேற்று நாளை படத்தின் மூலம் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் இந்தியாவின் முதல் ஏலியன் படமாக அயலான் உருவாகியிருக்கிறது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படம் வெளியாகி வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், கொரோனா காரணமாக முதலில் படத்தின் பணிகள் பாதிக்கப்பட்டன. அதன் பிறகு கிராஃபிக்ஸ் பணிகளால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என முதலில் கூறப்பட்டு படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

Sivakarthikeyans Ayalaan Movies Teaser is Out Now

ரிலீஸ் தள்ளிவைப்பு: படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று அறிவிப்பு வந்தவுடன் சிவாவின் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியிலும் எதிர்பார்ப்பிலும் இருந்தனர். சூழல் இப்படி இருக்க படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போயிருக்கிறது. அதன்படி படமானது பொங்கலுக்கு ரிலீஸாகவிருப்பது உறுதியாகியிருப்பது. ஏலியன்களை பற்றிய படம் என்பதால் கண்டிப்பாக கொண்டாட்டத்துக்கு குறை இருக்காது என்றே ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.

அயலான் டீசர்: இந்நிலையில் அயலான் படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சன் டிவி யூட்யூப் சேனலில் அயலான் படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது. டீசரில், ஏலியன் பூமிக்கு வருவது போன்றும் அந்த ஏலியன் சிவகார்த்திகேயன், யோகிபாபு, கருணாகரன் ஆகியோரிடம் இருப்பதுபோலவும் காட்சிகள் இருக்கின்றன. மேலும் அந்த ஏலியனை அழிப்பதற்கான முயற்சியும் நடப்பதுபோல் தெரிகிறது. இந்த டீசரை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக புதிய அனுபவமாக இருக்கும் என கமெண்ட்ஸ் செய்து டீசரை அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X