Ayalan: அயலான் படத்தில் ஏலியனாக நடித்த நடிகர் யார் தெரியுமா.. பாக்கலாங்களா!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாவீரன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்துள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்கே21 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். படத்தில் அவருக்கு ஜோடி சேர்ந்துள்ளார் சாய் பல்லவி.
இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து காஷ்மீரில் 75 நாட்கள் நடைபெற்ற நிலையில், அடுத்ததாக சென்னையில் சூட்டிங் துவங்கவுள்ளது.

அயலான் படத்தில் ஏலியனாக நடித்த நடிகர்: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். ஒரு சில சறுக்கல்கள் இருந்தாலும் தன்னுடைய கேரியர் பாதிக்காமல் தொடர்ந்து வெற்றிப்பட இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். அவரது மாவீரன் படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டடித்துள்ளது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களுக்கு சூப்பர் என்டர்டெயின்மெண்டை கொடுத்து வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் தற்போது எஸ்கே21 படத்தில் இணைந்து நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து 75 நாட்களை கடந்து காஷ்மீரில் கடுமையாக குளிர் உள்ளிட்டவற்றுடன் நடந்து முடிந்துள்ளது. படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ள நிலையில், படத்தில் சில போர்க்காட்சிகளையும் படக்குழுவினர் படமாக்கியுள்ளனர். இதற்கான தன்னுடைய ஹேர்ஸ்டைலையும் சிவகார்த்திகேயன், குல்லா போட்டு மறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து அடுத்ததாக சென்னையில் இந்தப் படத்தின் சூட்டிங் நடக்கவுள்ளது. இந்த சூட்டிங்கில் படத்தின் நாயகி சாய்பல்லவியும் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, சிவகார்த்திகேயனின் அயலான் படம் வரும் பொங்கலையொட்டி வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக தீபாவளி பந்தயத்தில் இந்தப் படம் இணையவிருந்த நிலையில், சிஜி வேலைகள் மீதமுள்ளதால் படத்தின் ரிலீஸ் பொங்கலுக்கு தள்ளிப் போயுள்ளது.
இந்தப் படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், படத்தில் ஏலியன் கேரக்டர் மிகபெரிய வரவேற்பை ரிலீசுக்கு முன்னதாகவே பெற்றுள்ளது. ஏறக்குறைய 6 ஆண்டுகளாக இந்தப் படம் உருவாகிவருகிறது. படத்தை இயக்கிவருகிறார் ரவிக்குமார். படத்தின் சிஜி வேலைகள் உள்ளிட்டவற்றால் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப் போய் வருகிறது. படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரகுல் பிரீத் சிங், யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்புகள் எகிற இதுவும் காரணமாக அமைந்துள்ளது. ஏலியனை மையமாக வைத்து சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஏலியன் சம்பந்தப்பட்ட காட்சிகளை பிரம்மாண்டமான அளவில் பிஎப்எக்ஸ் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளனர். இதன் காட்சிகளை சமீபத்தில் வெளியான டீசரில் பார்க்க முடிந்தது.
VFXல் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள போதிலும் இந்த தொழில்நுட்பத்திற்கு உதவும் வகையில் நடித்துள்ளார் நடிகர் வெங்கட் செங்குட்டுவன். முன்னதாக இந்த காட்சிகளில் நடித்த நடிகர் யார் என்று தெரியாமல் இருந்த நிலையில், தற்போது அந்த நடிகர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏலியனை வைத்து அதிகமான படங்கள் வெளியாகாத நிலையில், தற்போது இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இன்று நேற்று நாளை படம் கொடுத்து சூப்பர் ஹிட் வெற்றியும் இந்த எதிர்பார்ப்பில் இணைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











