Maaveeran Box Office: 4 நாட்களில் 50 கோடி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட மாவீரன் படக்குழு!
சென்னை: சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் வெளியான 4 நாட்களிலேயே 50 கோடி வசூல் செய்து அபார சாதனை செய்தது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான மாவீரன் திரைப்படத்தை மண்டேலா படத்தை இயக்கிய இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கி இருந்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர், அம்மாவாக சரிதா, தங்கையாக மோனிஷா பிளெஸ்ஸி, காமெடியனாக யோகி பாபு மற்றும் வில்லனாக மிஷ்கின் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
மாவீரன் படம் சிவகார்த்திகேயனுக்கு சரியான கம்பேக்காக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிரடியாக வசூல் வேட்டை நடத்தி கெத்துக் காட்டி உள்ளது.

50 கோடி வசூல்: மாவீரன் திரைப்படம் 40 முதல் 45 கோடி தான் 4 நாட்களில் வசூல் ஈட்டியிருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் சற்று முன் அதன் அதிகாரப்பூர்வ வசூலை அறிவித்து சிவகார்த்திகேயன் ரசிகர்களையும் மாவீரன் படக்குழுவினரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளது.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான நிலையில், 50 கோடி வசூலை முதல் வாரத்திலேயே எட்டி உள்ளது.
100 கோடியை தாண்டும்: அடுத்த மாதம் 10ம் தேதி தான் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வெளியாகிறது. இந்நிலையில், கிட்டத்தட்ட தியேட்டர்களில் 4 வாரங்களாவது வெற்றிகரமாக மாவீரன் திரைப்படம் ஓடும் நிலை உள்ள நிலையில், மாவீரன் திரைப்படம் 100 கோடி முதல் 150 கோடி வரை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் உள்ளிட்ட படங்கள் 100 கோடி கிளப்பில் இணைந்த நிலையில், மாவீரன் திரைப்படம் கண்டிப்பாக அந்த கிளப்பில் இணையும் என்பது கன்ஃபார்ம் ஆகி உள்ளது.
ரசிகர்கள் செம ஹேப்பி: மாவீரன் திரைப்படம் முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம் அதன் இரண்டாம் பாகம் மற்றும் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் இல்லை என கடுமையான விமர்சனங்கள் குவிந்த நிலையிலும், படத்தை பார்க்க மக்கள் தியேட்டர்களுக்கு அலைமோதி வரும் நிலையில் தான் இப்படியொரு பிரம்மாண்ட வசூல் சாத்தியம் ஆனது என ரசிகர்கள் செம ஹேப்பி ஆகி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











