Maaveeran Box Office: நைட் ஷோவில் பொங்கி வழிந்த கூட்டம்.. மாவீரன் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் இதோ!

சென்னை: சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா மற்றும் யோகி பாபு நடிப்பில் ஜூலை 14ம் தேதி வெளியான மாவீரன் திரைப்படம் முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஓபனிங் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த தீபாவளிக்கு வெளியான பிரின்ஸ் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், மாவீரன் படத்தை பெரிதும் நம்பி இருந்தார்.

Sivakarthikeyans Maaveeran Day 1 Box Office Reports are here

வெள்ளிக்கிழமை காலை முதலே கணிசமான கூட்டம் இருந்த நிலையில், மாலை மற்றும் இரவு நேர காட்சிகளில் ரசிகர்கள் கூட்டம் பொங்கி வழிந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக திரையிட்ட தியேட்டர்கள் எல்லாம் மாறி உள்ளன.

பாசிட்டிவ் விமர்சனங்கள்: ஃபேண்டஸி ஆக்‌ஷன் படமாக உருவாகி உள்ள மாவீரன் படத்தை மண்டேலா படத்தை இயக்கி இரு தேசிய விருதுகள் வென்ற இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கி உள்ளார். குடிசை மாற்று வாரியம் சார்பாக மக்களுக்கு கட்டிக் கொடுக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளின் தரம் அமைச்சர்களின் ஊழல் காரணமாக எந்தளவுக்கு மோசமாக உள்ளது என்பதை அழுத்தமாக சொல்லி உள்ள திரைக்கதையுடன் வெளியாகி உள்ள இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

விமர்சன ரீதியாகவும் படத்தின் முதல் பாதிக்கு சூப்பரான விமர்சனங்களும் இரண்டாம் பாதி டீசன்ட் என்கிற விமர்சனங்களும் குவிந்துள்ள நிலையில், இந்த வாரம் தியேட்டருக்கு சிவகார்த்திகேயன், யோகி பாபுவின் காமெடி ரகளையை பார்த்து வயிறு குலுங்க சிரிக்க ரசிகர்கள் டிக்கெட்டுகளை புக் செய்து தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர்.

கம்பேக் கொடுத்த சிவகார்த்திகேயன்: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நான் யானை இல்லை, குதிரை விழுந்த உடனே எழுந்து விடுவேன் என சொல்வார். அவரை போலவே சிவகார்த்திகேயனும் பிரின்ஸ் படத்தில் விழுந்ததை ஒப்புக் கொண்டு மாவீரன் படத்தில் மாஸாக எழுந்து நின்றுள்ளார் என அவரது ரசிகர்கள் குட்டி ரஜினி என்றும் அடுத்த சூப்பர்ஸ்டார் சிவகார்த்திகேயன் தான் என்றும் பதிவுகளை போட்டு சோஷியல் மீடியாவை திணறடித்து வருகின்றனர்.

முதல் நாள் வசூல்: மாவீரன் படத்தின் பட்ஜெட் 35 கோடி என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் தமிழ்நாட்டில் 7.6 கோடி ரூபாய் என்றும் இந்தியளவில் 8.5 கோடி என்றும் உலகளவில் 10 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சாந்தி டாக்கீஸ் இந்த படத்திற்கு அதிகாரப்பூர்வ பாக்ஸ் ஆபிஸை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு வெளியான படங்களில் டாப் 5 முதல் நாள் ஓபனிங் கொடுத்த படங்களில் மாவீரன் படமும் இடம்பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை தமிழ்நாட்டிலேயே மாவீரன் படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X