Kottukkaali: அமீர் பேச்சுல தான் உச்சபட்ச வன்முறை உள்ளது.. ’மாவீரன்’ பட தயாரிப்பாளர் பதிலடி!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நல்ல தரமான படங்களை தயாரித்து வரும் நிலையில், இயக்குநர் அமீர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை சினிமா வட்டாரத்தில் கிளப்பியது. 'கெவி' பட விழாவில் கலந்துக் கொண்டு பேசிய அமீர், தியேட்டரில் 'கொட்டுக்காளி' படத்தை ரிலீஸ் செய்ததே வன்முறை என்கிற அளவுக்கு பேசியுள்ளார்.

பி.எஸ். வினோத்ராஜை ரசிகர்கள் திட்டுவதற்கு காரணமே சிவகார்த்திகேயனின் பணத்தாசை தான் என்கிற உள்நோக்கத்துடன் அமீர் பேசியுள்ளார் என சமூக வலைதளங்களில் சர்ச்சை வெடித்த நிலையில், சிவகார்த்திகேயனை வைத்து மாவீரன் படத்தை தயாரித்த அருண் விஸ்வா தற்போது இயக்குநர் அமீர் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வரிசையாக ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை போட்டுள்ளார்.

sivakarthikeyan ameer kottukkaali

ஒரு படத்துடன் இன்னொரு படத்தை வெளியிடக் கூடாது என்று எப்படி சொல்லலாம் என்றும் பெரிய படங்களுடன் சிறிய படங்களை வெளியிடக் கூடாது என்று சொல்ல நீங்கள் யார் என்கிற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

சிவகார்த்திகேயனை சீண்டிய அமீர்: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கொட்டுக்காளி படத்தை மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை படத்துடன் வெளியிட்டது தவறு என்கிற நோக்கத்தில் அமீர் பேசிய நிலையில், அவரது நோக்கம் கொட்டுக்காளி படத்தை பற்றிய அக்கறை கிடையாது என்றும் சிவகார்த்திகேயன் மீதுள்ள வன்மம் தான் வெளிப்பட்டுள்ளது என சர்ச்சை வெடித்துள்ளது.

மாவீரன் தயாரிப்பாளர் பதிலடி: "ஒரு திரைப்படத்தை எந்த தேதியில் வெளியிட வேண்டும்,அதை எவ்வாறு விளம்பரம் செய்ய வேண்டும் என்பது அந்த தயாரிப்பாளரின் உரிமை! அந்த திரைப்படத்தை ஆதரிப்பதும் நிராகரிப்பதும் மக்களின் உரிமை!
இந்த படம்தான் திரையரங்கில் வர வேண்டும்,இந்த படம் வர கூடாது! இந்த படத்துக்கூட எதுக்கு வரணும்? பெரிய படம் கூட சின்ன படம் வருவது தவறு/வன்முறை என்று சொல்லும் இயக்குனர் அமீர் சார் அவர்களின் பேச்சில்தான் உச்சபட்ச வன்முறை உள்ளது #DirectorAmeer #Kottukkali" என பதிவிட்டுள்ளார்.

sivakarthikeyan ameer kottukkaali

அமீருக்கு கேள்வி: "மாவீரன் படத்தின் தயாரிப்பாளரான அருண் விஸ்வா மேலும், "சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட ஒரு படத்தை எதுக்கு இங்க theatre la release பண்ணனும்??" நம்ம audience சர்வதேச தரத்துல இல்லனு சொல்றீங்களா அமீர் சார்?? " என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

sivakarthikeyan ameer kottukkaali

கோட் கூட மோதலாமான்னு கேட்குறீங்க: "தமிழ் சினிமாவில் ஒரு ஆகப்பெரும் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் நீங்கள்! சிறிய படங்களை தயாரித்தும் உள்ளீர்கள்! கொட்டுக்காளி போன்ற ஒரு சிறிய படம் release ஆகி 4 நாள் தான் ஆச்சு

நீங்க இப்படி பேசினா அதோட விளைவு என்ன,அந்த இயக்குனர் & team அ பாதிக்க வாய்ப்பு இருக்கா இல்லயானு உங்களுக்கு தெரியாதா?

"பெரிய படம் கூட சின்ன படம் வரலாமா?
வாழை கூட கொட்டுக்காளி திரையரங்குல விட்டது வன்முறை!
GOAT படத்தோட #vaazhai vantha Nalla Irukkuma?"

பிரிவினைவாதத்தை எதிர்த்து தொடர்ந்து மேடைகளில் குரல் குடுக்கும் உங்களை போன்ற ஒருவரிடமிருந்து, அனைவரும் சமம்னு சமூகநீதி பேசும் உங்களை போன்ற ஒரு இயக்குனரிடமிருந்து இதை எதிர்பாக்கல அமீர் சார்! " என வரிசையாக கேள்விகளை எழுப்பி இயக்குநர் அமீருக்கு பதிலடி கொடுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இதுவரை எந்த ரியாக்‌ஷனும் கொடுக்கவில்லை.

sivakarthikeyan ameer kottukkaali

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X