Maaveeran: மாஸ் காட்டுவாரா சிவகார்த்திகேயன்.. மாவீரன் படத்தின் டிக்கெட் புக்கிங் எப்படி இருக்கு?

சென்னை: யோகி பாபுவை வைத்து மண்டேலா எனும் அரசியல் நய்யாண்டி படத்தை இயக்கி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் கவனத்தையும் திருப்பிய இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் ஜூலை 14ம் தேதி திரைக்கு வருகிறது.

சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், டான் படங்கள் 100 கோடி வசூலை ஈட்டிய நிலையில், கடந்த ஆண்டு தீபாவளி ரிலீஸாக வெளியான பிரின்ஸ் படம் அட்டு ஃபிளாப் ஆனது.

Sivakarthikeyans Maaveeran ticket bookings are going good

இந்நிலையில், மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படம் சிவகார்த்திகேயனுக்கு கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தின் ப்ரீ புக்கிங் எப்படி இருக்கு என்பது குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

விஜய்சேதுபதி வாய்ஸ்: பாலிவுட்டில் ஷாருக்கான் படத்துக்கு சல்மான் கானும், சல்மான் கான் படத்துக்கு ஷாருக்கானும், அமீர் கான் படத்துக்கு ஷாருக்கானும் சப்போர்ட் செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவிலும் லோகேஷ் கனகராஜ் யூனிவர்ஸ் என்கிற பெயரில் மல்டி ஸ்டார் காஸ்டிங்கை சாத்தியமாக்கி வருகிறார்.

இந்நிலையில், போட்டி நடிகர் என்றும் பார்க்காமல் விஜய்சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் இடையே உள்ள நல்ல பாண்டிங்கின் விளைவு தான் சிவகார்த்திகேயனுக்கு மாவீரன் படத்தில் கேட்கும் அந்த குரலாகவே விஜய்சேதுபதி மாறியுள்ளார்.

Sivakarthikeyans Maaveeran ticket bookings are going good

மாவீரன் படத்துக்கு 3 நாட்கள் விஜய்சேதுபதி டப்பிங் பேசியது தான் லியோ படத்தில் அவர் டப்பிங் பேசியதாக தகவல்கள் வெளியானது என்றும் கூறுகின்றனர்.

சிவகார்த்திகேயன் நம்பிக்கை: தளபதி படத்தில் ரஜினிகாந்த் இருந்த லுக்கிலேயே இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் நிச்சயம் போன படத்தை போல மாவீரன் சொதப்பாது, ரசிகர்களை திருப்திப்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் மாவீரன் படத்தின் டிக்கெட் புக்கிங் ஓபனான நிலையில், சென்னையில் புக் மை ஷோ நிலவரம் எப்படி இருக்கிறது என்று பார்த்தால் பாதி பச்சையாகவும் பாதி சிகப்பாகவும் உள்ளது.

Sivakarthikeyans Maaveeran ticket bookings are going good

டிக்கெட் புக்கிங் எப்படி?: தமிழ்நாட்டில் எந்தவொரு புதுப்படத்திற்கும் காலை 5 மணி ஸ்பெஷல் ஷோ இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. காலை 9 மணிக்குத் தான் ரோகிணி, காசி உள்ளிட்ட ஒரு சில பிரபல திரையரங்குகளில் முதல் காட்சி வெளியாகிறது.

பிவிஆர் உள்ளிட்ட மல்டி பிளக்ஸ்களில் 11 மணிக்கு மேல் தான் முதல் காட்சி ஆரம்பமாகிறது. திரையிட்ட அனைத்து இடங்களிலும் முதல் காட்சி ஹவுஸ்ஃபுல் ஆகி விட்டது. முதல் நாளுக்கான ஷோ சில இடங்களில் நிரம்பி விட்டது. பல இடங்களில் நிரம்பி வருகிறது.

படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்தால், இந்த வாரம் மாவீரன் படம் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் என்பதில் சந்தேகமே இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X