சிவகார்த்திகேயனின் மதராஸி.. இங்கேயும் சாய் அபயங்கரா?.. சலம்பலா செம அலப்பறை

சென்னை: சிவகார்த்தியேன் நடித்த அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு; அவர் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்திருக்கிறார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும் நடித்துவருகிறார். மதராஸி திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் நிலையில் இன்று படத்திலிருந்து முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற ஆரம்பித்திருக்கிறது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அந்த வெற்றி அவரது சம்பளத்தையும், மார்க்கெட்டையும் உச்சத்தில் கொண்டு சென்று நிறுத்தியிருக்கிறது. முக்கியமாக கோலிவுட்டின் டாப் 5 கமர்ஷியல் ஹீரோக்கள் என்ற லிஸ்ட்டில் அவரை இணைத்தது. இதன் காரணமாக எஸ்கேவுக்கு திரைத்துறையில் தனி சிம்மாசனம் போடப்பட்டுவிட்டதாகவும் அவரின் ரசிகர்கள் கூறுகிறார்கள்.

அடுத்த படங்கள்: அமரன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடிக்க கமிட்டானார் எஸ்கே. முருகதாஸும் கடந்த சில வருடங்களாகவே ஹிட் படம் கொடுக்க முடியாமல் திணறிவருகிறார். சல்மான் கானை வைத்து அவர் கடைசியாக இயக்கிய சிக்கந்தர் படமும் இயக்குநருக்கு சிக்கலைத்தான் உண்டு செய்தது. எனவே மதராஸி படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க அவர் காத்திருக்கிறார்.

Sivakarthikeyan s Madharasi First Single Salambala is out now
Photo Credit:

என்ன மாதிரியான கதை?: எஸ்கேவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியானது. அதனை பார்க்கையில் வழக்கமான முருகதாஸ் ஜானரில்தான் கதை இருக்குமோ என்ற கேள்வியை ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் மாவீரன், அயலான், அமரன் வரிசையில் தொடர்ச்சியான நான்காவது வெற்றி படமாக எஸ்கேவுக்கு இயக்குநர் கொடுத்துவிட வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் பலமான எதிர்பார்ப்பு.

முதல் சிங்கிள்: சூழல் இப்படி இருக்க படத்தின் முதல் சிங்கிளான சலம்பலா பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சூப்பர் சுப்பு வரிகளில் அனிருத் இசையமைப்பில் சாய் அபயங்கர் பாடியிருக்கும் இப்பாடலின் லிரிக்கல் வீடியோ பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றிருக்கிறது. பாடலின் வரிகள் அனைத்துமே திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஏற்றிருக்கும் கேரக்டரை மறைமுகமாக விளக்கும்படி இருக்கிறது.

நடனத்தில் புயல்: பாடல் வரிகள், சாயின் குரல், அனிருத்தின் இசை ஆகியவை போல் இப்பாடலில் சிவகார்த்திகேயனின் நடனமும் அலப்பறையை கூட்டுகிறது. Sheekar Vj அட்டகாசமாக கோரியோகிராஃபி செய்திருக்கிறார். பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. எஸ்கே ரசிகர்களும், பாடலை கேட்ட பின்பு; படம் சம்பவம் செய்யப்போவதற்கான அறிகுறி இந்தப் பாடலில் தெரிகிறது என அதனை ட்ரெண்டாக்கிவருகிறார்கள்.

பராசக்தி: இதற்கிடையே சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும் நடித்துவருகிறார் எஸ்கே. இதில் அவருடன் அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் பொள்ளாச்சியில் மும்முரமாக நடந்துவருகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் எஸ்கே. இப்படத்தின் ஷூட்டிங் மிக விரைவில் தொடங்கப்படவிருப்பதாக வெங்கட் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X