ஒரே குண்டு சத்தம்.. மதராஸி படத்தின் பிளஸ் & மைனஸ்.. செய்யாறு பாலு விமர்சனம்!

சென்னை: சிவகார்த்திகேயன், ருக்மிணி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படம் இன்று தியேட்டரில் வெளியானது. சிறப்பு காட்சியாக காலை 9 மணிக்கு இத்திரைப்படம் வெளியாகி மக்களிடம் இருந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கும் நிலையில், பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு படத்தின் விமர்சனத்தை கூறியுள்ளார்.

மதராஸி படத்தின் கதை என்னவென்றால், தமிழகம் ஒரு அமைதி பூங்காவாக இருக்கிறது. அதில், எப்படியாவது துப்பாக்கி கலாச்சாரத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக படத்தின் வில்லனான வித்யுத் ஜம்வால் மற்றும் அவரது நண்பர்கள் இருவரும் சேர்ந்து. ஆறு கண்டெய்னர்கள் நிறைய துப்பாக்கிகளை சென்னைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த துப்பாக்கிகளை எப்படியாவது தமிழகம் முழுவதும் சப்ளை செய்து ஆக வேண்டும். அமைதியாக இருக்கும் தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக நார்த் இந்தியாவில் இருந்து ஆறு கண்டெய்னர்கள் சென்னைக்குள் வருகின்றன. அந்த ஆறு கண்டெய்னர்களையும் தேசிய பாதுகாப்பு படைகளை சேர்ந்த பிஜுமேனன் தடுத்து நிறுத்துவதற்காக, களத்தில் இறங்குகிறார்.

Madharasi Sivakarthikeyan Review
Photo Credit:

படத்தின் கதை: ஒரு கட்டத்தில் பிஜூ மேனனின் டீமுக்கு அந்த கண்டெய்னர்கள் எங்கே போனது என்றே தெரியாமல் போய்விடுகிறது. இதனால், ரகசியமாக ஒரு குழுவை அமைந்து, காணாமல் போன கண்டெய்னர்களை கண்டுபிடித்து அழித்து, அந்த துப்பாக்கிகள் தமிழகத்திற்குள் சப்ளை ஆகாமல் அழிக்க வேண்டும் என்பதற்காக பிஜுமேனன் படாத பாடுபடுகிறார். இந்த ஆப்ரேஷனில் உயிரை துச்சமாக பதிக்கும் ஒருவன் வேண்டும் என்று சொல்லும் போது, இந்த ஆபத்தான வேலையை செய்து முடிக்க சிவகார்த்திகேயன் களமிறக்கப்படுறார். பிஜு மேனன், சிவகார்த்திகேயனை இந்த ரகசிய வேலையில் ஈடுபடுத்த காரணம் என்ன.. சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் நடந்தது என்ன போன்றவற்றை அழகான கதையாக நகர்த்தி இருக்கிறார் இயக்குநர்.

பிளஸ்: காமெடி படங்களில் குழந்தைகளுக்கு பிடித்தமான படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்திற்கு பிறகு முழு ஆக்சன் ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த திரைப்படத்தில் இறங்கி நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். படத்தின் முதல் பாதி பலவிதமான திருப்படங்களுடன் முடிய இரண்டாவது பாதி தீபாவளி பட்டாசாக வெடித்துக்கொண்டே இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் கதையும், சிவகார்த்திகேயனும் தான் படத்தின் மிகப்பெரிய பிளஸாக அமைந்துள்ளது.

படத்தின் மைனஸ்: இந்த திரைப்படம் ஒரு ஆக்ஷன் திரைப்படமாக இருந்தாலும், இதில் பல லாஜிக்கல் மீறல்கள் உள்ளன. அதாவது அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தை சீர்குழிக்க வேண்டும் என்பதற்காக, ஆறு கண்டெய்னர்கள் யாருக்கும் தெரியாமல் சென்னைக்குள் வருகிறது என்று சொல்வதை யாராலும் எற்றுக்கொள்ளவே முடியவில்லை. முதல்வருக்கு தெரியாதா, உள்துறை அமைச்சருக்கு தெரியாதா.. தும்மினாலே ஓடி வரும் மீடியாக்களுக்கு தெரியாதா என பல கேள்விகள் வருகின்றன. அதேபோல சாதாரண மனிதராக இருக்கும் சிவகார்த்திகேயன் எப்படி, தேசிய பாதுகாப்பு படையினர் எப்படி தேர்வு செய்து நாட்டையே உலுக்கும் ஒரு பிரச்சனைக்கு தீர்வாக அனுப்பினார் என பல லாஜிக் மீறல்கள் இருக்கின்றன. இதில், முருகதாஸ் சற்று கவனம் செலுத்தி இருக்க வேண்டும். இது தான் படத்தின் மைனசாக பார்க்கப்படுகிறது. மற்றபடி மதராஸி திரைப்படம் சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது என செய்யாறு பாலு தனது விமர்சனத்தில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X