துப்பாக்கி கொடுத்த விஜய்யுடன் மோத விரும்பாத சிவகார்த்திகேயன்.. பராசக்தி ரிலீஸ் இந்த தேதியிலா?
சென்னை: சமீபத்தில் இயக்குநர் சுதா கொங்கரா அளித்த பேட்டியில் கூட பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதியை வெளிப்படையாக சொல்லாமல், அது தயாரிப்பு நிறுவனம் தான் சொல்ல வேண்டும் என்று கூறிவிட்டார். இந்நிலையில், லேட்டஸ்ட்டாக கசிந்த தகவலின்படி பராசக்தி திரைப்படம் விஜய்யின் ஜன நாயகன் படத்துடன் மோத வாய்ப்பே இல்லை என்கின்றனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாக்ஷி சவுத்ரி மற்றும் லைலா நடிப்பில் வெளியான கோட் படத்தில் கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். விஜய் விருதுகள் நிகழ்ச்சியிலேயே, அதுதான் இந்த பக்கம் வந்துட்டல, இன்னும் ஏன் அந்த பக்கம் நிக்குற என விஜய் சிவகார்த்திகேயனை பார்த்து பேசியது முதல், கடைசியாக துப்பாக்கியை எடுத்து எஸ்கே கையில் கோட் படத்தில் கொடுத்தது வரை அவரது வளர்ச்சியை விஜய் ரொம்பவே ஆதரித்து வருவது கண்கூடாக தெரிகிறது.

ஆனால், திடீரென விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்துடன் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தை மோத விடப் போவதாக தகவல்கள் பரவின. ஆனால், அதற்கு வாய்ப்பு குறைவு என்றே லேட்டஸ்ட் அப்டேட்கள் கிடைத்துள்ளன.
ஜனவரி 9 ஜனநாயகன் ரிலீஸ்: கேவிஎன் தயாரிப்பில் அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரியாமணி, பிரகாஷ் ராஜ், நரேன் நடிப்பில் உருவாகி வரும் ஜன நாயகன் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கியுள்ளார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை டார்கெட் செய்து 10 நாட்கள் வசூலை அள்ள ஜனவரி 9 வெள்ளிக்கிழமை படம் வெளியாகிறது.
பராசக்தி ரிலீஸ் எப்போ?: பொள்ளாச்சியில் பராசக்தி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை சுதா கொங்கரா வேகப்படுத்தி எடுத்து வருகிறார். பொங்கலுக்குள் பராசக்தி படத்தை வெளியிட வேண்டும் என்கிற கட்டாயத்துக்குள் அவர் தள்ளப்பட்டு இருக்கிறார். ஆனால், விஜய்யுடன் நேருக்கு நேர் மோத சிவகார்த்திகேயன் விரும்பவில்லை என்றும் ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதன்கிழமை பராசக்தி படத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாக லேட்டஸ்ட் தகவல்கள் கசிந்துள்ளன. புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை என்பதால் பராசக்தி படமும் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் வார வெள்ளிக்கிழமையே ஜனநாயகன் படம் வெளியாகும் நிலையில், அந்த படமும் 10 நாட்கள் வசூலை வாரிக்குவிக்கும் என தெரிகிறது.
ரிலீஸ் தேதியை காணோம்: டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இட்லி கடை படத்தின் முதல் சிங்கிள் போஸ்டர் வரும் ஜூலை 27ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், அந்த படத்தின் ரிலீஸ் தேதியும் போஸ்டரில் இடம்பெறவில்லை. அதே போல பராசக்தி படத்தின் அப்டேட்களிலும் ரிலீஸ் தேதி இல்லாத நிலையில், டான் பிக்சர்ஸ் தெளிவாக கணக்குப் போட்டு படங்களை வெளியிடும் முடிவில் உள்ளதாக கூறுகின்றனர். சமீபத்தில், அமலாக்கத்துறையிடம் ஆகாஷ் பாஸ்கரன் சிக்கியதன் பிறகு தான் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











