சிவகார்த்திகேயனின் பராசக்தி.. அடுத்து ஷூட்டிங் எங்கே நடக்குது தெரியுமா?
சென்னை: சிவகார்த்திகேயன் கைவசம் இப்போது சுதா கொங்கராவின் பராசக்தி, ஏ.ஆர்.முருகதாஸின் மதராஸி ஆகிய இரண்டு படங்கள் இருக்கின்றன. இருவருமே மிகச்சிறந்த இயக்குநர்கள் என்ற பெயரை பெற்றிருக்கிறார்கள் என்பதால் இந்த படங்களின் மீது எஸ்கே ரசிகர்களுக்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. பராசக்தி திரைப்படம் அடுத்த வருடமும், மதராஸி செப்டம்பர் ஐந்தாம் தேதியும் ரிலீஸாகவிருக்கின்றன.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் அவரது மார்க்கெட்டை உச்சத்துக்கு கொண்டு சென்றுவிட்டது. உலக அளவில் கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து மெகா சாதனை படைத்தது. இதன் காரணமாக தமிழின் டாப் கமர்ஷியல் ஹீரோக்களில் ஒருவராக மாறிவிட்டார் எஸ்கே. அதுமட்டுமின்றி அமரன் கொடுத்த வெற்றியால் தனது சம்பளத்தையும் அவர் அதிகரித்துவிட்டார் என்றும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.
முருகதாஸ் படத்தில்: அமரன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்திலும் நடிக்க கமிட்டானார். முருகதாஸுடன் முதன்முறையாக இணைந்திருப்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்த நிலையில்; சல்மான் கானை வைத்து சிக்கந்தர் படத்தை இயக்க சென்றார் முருகதாஸ். இதனால் ஷூட்டிங் கொஞ்சம் தாமதமானது. ஒருவழியாக படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. செப்டம்பர் மாதம் படம் ரிலீஸ் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

பராசக்தி ஹீரோ: இதற்கிடையே சூர்யாவை வைத்து புறநானூறு என்ற படத்தை ஆரம்பித்தார் இயக்குநர் சுதா கொங்கரா. ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்தில் சூர்யாவால் நடிக்க முடியவில்லை. உடனடியாக மாற்றி யோசித்த சுதா, சிவகார்த்திகேயனிடம் கதையை சொல்லி ஓகே வாங்கி; படத்துக்கு பராசக்தி என்று பெயர் வைத்து ஷூட்டிங்கையும் விறுவிறுவென்று நடத்த ஆரம்பித்துவிட்டார். எஸ்கேவுடன் சுதா சேர்ந்தது பலருக்கும் பெரிய ஆச்சரியத்தை உண்டு பண்ணியது என்பதுதான் உண்மை.
ஹிந்தி திணிப்புதான் மையம்: இப்படத்தின் கதை ஹிந்தி திணிப்பையும், அதற்கு எதிராக போராடிய மாணவர்கள் போராட்டத்தையும் மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. இதில் சிவாவுடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார். படத்திலிருந்து வெளியான அறிவிப்பு வீடியோவும் மாஸான வரவேற்பை பெற்றது. கண்டிப்பாக இந்தப் படம் எஸ்கேவின் கரியரில் பெரிய மைல் கல்லாக இருக்கும் என படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரத்தினர் தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தக்கட்ட ஷூட்டிங்: பராசக்தி ஷூட்டிங் அண்மையில் இலங்கையில் தீவிரமாக நடந்தது. அந்த ஷெட்யூலை முடித்துவிட்டு மதராஸி படத்தில் சில காட்சிகள் நடிப்பதற்காக அங்கு சென்றார் எஸ்கே. இப்போது மதராஸி படத்தின் ஷூட்டிங் மொத்தமாக முடிந்துவிட்டது. எனவே பராசக்தியின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கவிருக்கிறது. அந்தவகையில் பொள்ளாச்சியில் அடுத்த ஷெட்யூல் ஷூட் இன்று முதல் தொடங்கவிருக்கிறதாம். இப்படம் சிவகார்த்திகேயனுக்கு 25ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











