Sivakarthikeyan: SK25.. GV100.. மாஸாக நடந்த புறநானூறு படத்தின் பூஜை.. இந்த காம்போ மிரட்டுதே!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு கைக்கொடுத்துள்ளது. அவரை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. காமெடி ஹீரோவாக கோலிவுட்டில் நடைபோட்டுவந்த சிவகார்த்திகேயனுக்கு அமரன் படம் மாஸான வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்ததாக அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் இணைந்துள்ளார். இந்தப்படத்தின் பூஜை இன்றைய தினம் சென்னையில் சிறப்பாக போடப்பட்டுள்ளது. படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜெயம் ரவி, அதர்வா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்க கமிட்டாகியுள்ளனர்.

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன. அந்த வகையில் அவரது அமரன் படம் கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளி கொண்டாட்டமாக வெளியானது. இந்தப் படத்துடன் 4 படங்கள் ஒரே நேரத்தில் ரிலீசான நிலையிலும் தான்தான் நம்பர் ஒன் என்று இந்தப் படம் அதிரடி காட்டியது. படத்தை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் படம் 300 கோடி ரூபாய்களை தாண்டி சர்வதேச அளவில் வசூலித்ததுடன் ஓடிடியிலும் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. இந்தப் படத்தையடுத்து அடுத்ததாக ஏஆர் முருகதாசுடன் இணைந்து அடுத்தப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

புறநானூறு பட பூஜை: அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகிவரும் அவர் அடுத்ததாக சுதா கொங்கராவுடன் புறநானூறு படத்திலும் இணைந்துள்ளார். முன்னதாக இந்தப் படத்தில் நடிகர் சூர்யா, நஸ்ரியா, துல்கர் சல்மான் உள்ளிட்டவர்கள் இணையவிருந்த நிலையில், அடுத்தடுத்த இந்திப் படங்களின் கமிட்மெண்ட் காரணமாக இந்த புராஜெக்ட் கைவிடப்பட்டது. இதையடுத்து இந்தக் கதையில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார். அவருடன் நடிகர் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் நாயகியாக ஸ்ரீலீலாவும், மற்றொரு நாயகனாக அதர்வாவும் இந்தப் படத்தில் சுதா கொங்கராவுடன் இணைந்துள்ளனர்.

மீண்டும் இணைந்த அமரன் பட காம்போ: இந்தப்படத்திற்கு புறநானூறு என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் டைட்டில் விரைவில் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் பூஜை இன்றைய தினம் சென்னையில் சிறப்பாக போடப்பட்டுள்ளது. வழக்கம்போல இந்த பூஜையில் சிவகார்த்திகேயன் வேட்டி சட்டையில் இணைந்திருந்தார். மற்றவர்கள் கேஷுவலாக பங்கேற்றிருந்தனர். அமரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கும் இசையமைக்கவுள்ளார். இது அவரது 100வது படமாக உள்ள நிலையில், படத்திற்கு மற்ற படங்களை காட்டிலும் மிரட்டலாக இசையமைப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

SK25 & GV100 படம்: சிவகார்த்திகேயனின் 25வது படமாகவும் இந்தப் படம் உருவாகவுள்ளது. சுதா கொங்கராவும் முன்னதாக சூரரை போற்று என்ற சிறப்பான படத்தை கொடுத்துள்ள நிலையில், இந்தப் படம் இவர்கள் மூவரின் சிறப்பான கலவையில் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் படத்தில் ஸ்ரீலீலா, அதர்வா என மற்ற நடிகர்களும் இணைந்துள்ள நிலையில், பூஜைக்கு முன்னதாகவே படம் மிகச்சிறப்பான கவனத்தை பெற்றுள்ளது. இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களத்தை சுதா கொங்கரா உருவாக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், படத்தில் அழுத்தமான கதைக்களத்தை அவர் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











