Don't Miss!
- Automobiles
கார் ஓட்டும்போது ஏன் கழுத்து வலிக்குது தெரியுமா? இந்த விஷயங்களை செஞ்சா வலி இருந்த இடமே தெரியாம பறந்து போயிரும்
- News
ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பது தமிழ்நாட்டுக்கு அழகல்ல! ஆர்.என்.ரவிக்கு ஆதரவாக சசிகலா!
- Sports
"கிரிக்கெட்டின் அழிவு இது".. பாகிஸ்தானை போல மாறி வருகிறதா இந்தியா??.. ஆகாஷ் சோப்ரா மன வேதனை!
- Finance
திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. சர்ப்ரைஸ் கொடுத்த டாடா மோட்டார்ஸ்.. ரூ.2958 கோடி லாபம்..!
- Lifestyle
நீங்க நினைத்ததை விட எடையை வேகமாக குறைக்க இந்த பழங்கள் அல்லது காய்கறி சாறுகளில் ஒன்றை தினமும் குடித்தால் போதும்
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
டான் படத்தில் சிறப்பாக வொர்க் அவுட் ஆன அப்பா சென்டிமெண்ட்..அப்பா சென்டிமெண்ட்டில் அடுத்தடுத்த படங்கள்!
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் இன்றைய தினம் வெளியாகியுள்ள படம் டான். இந்தப் படத்தில் கல்லூரி மாணவராக நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஜோடி சேர்ந்துள்ளார் பிரியங்கா மோகன். படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வழக்கம்போல அனைவரையும் கவர்ந்துள்ளார்.
Recommended Video
சிஷ்யனை
பாராட்டிய
இயக்குநர்
அட்லி..
சிவகார்த்திகேயனும்,
சிபியும்
கலக்கிட்டீங்கடா
என
செம
ட்வீட்!

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், ஷிவாங்கி, பால சரவணன், எஸ்ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் இன்றைய தினம் வெளியாகியுள்ளது டான் படம். இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசான நிலையில், படத்தின் விமர்சனங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

டாக்டர் படத்தின் வெற்றி
நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் கொடுத்த வெற்றியை தொடர்ந்து தற்போது டான் படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் முதல்முறையாக ஷிவாங்கி நடித்துள்ளார். மேலும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக சமுத்திரக்கனி நடித்துள்ளார். இந்தக் கேரக்டர் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

அப்பா -மகன் சென்டிமெண்ட்
தன்னுடைய மகனின் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்க இன்ஜினீயரிங்கில் சேர்த்துவிட்டு அதற்காக மெனக்கெடும் கேரக்டரில் சமுத்திரக்கனி சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். இந்தப் படத்தில் அப்பா -மகன் சென்டிமெண்ட்டை சிறப்பாக பயன்படுத்தியுள்ளார் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி. அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

அப்பா சென்டிமெண்ட்
முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களிலும் அப்பா சென்டிமெண்டை கொண்டு அதிகமான காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதேபோல இந்தப் படத்திலும் அப்பா சென்டிமெண்ட் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளன.

சிவகார்த்திகேயன் ஏக்கம்
தன்னுடைய அப்பாவை இளம் வயதிலேயே இழந்துவிட்டார் நடிகர் சிவகார்த்திகேயன். இதுகுறித்த ஏக்கத்தை அவர் தொடர்ந்து பல படங்களில் பதிவு செய்துள்ளார். அந்த ஏக்கத்தை போக்கிக் கொள்ளும் வகையில் அவர் தொடர்ந்து தன்னுடைய படங்களில் அப்பா சென்டிமெண்ட் காட்சிகளை வைத்து அதில் வெற்றியும் பெற்று வருகிறார்.

சிவகார்த்திகேயன் ஆதங்கம்
அவர் ஒரு பேட்டியில் தான் தன்னுடைய தந்தைக்கு எந்தவிதமான விஷயத்தையும் அவர் வாழும்போது செய்ததில்லை என்றும் அவருக்கு கொள்ளி வைத்தது மட்டுமே தான் அவருக்கு செய்த சிறப்பு என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது படங்களில் பயன்படுத்தப்படும் அப்பா சென்டிமெண்ட் அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்தும்வகையில் உள்ளது.