அஜித்துடன் மோதும் ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன்?.. எஸ்கே 23 ரிலீஸ் பற்றி லேட்டஸ்ட் தகவல்

சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இப்போது சிவகார்த்திகேயனை வைத்து படத்தை இயக்கியிருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே ஹிட் படம் கொடுக்க முடியாமல் திணறிவருகிறார் முருகதாஸ். எனவே எஸ்கேவை வைத்து அவர் இயக்கும் படத்தில் பந்தயம் அடித்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் முருகதாஸ். இந்தப் படத்தை முடித்துவிட்டு சல்மான் கானை வைத்து படம் இயக்குகிறார். இந்தச் சூழலில் சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கியிருக்கும் படம் பற்றி புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

அஜித் நடிப்பில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான படம் தீனா. எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராக இருந்த ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தில் அஜித்துடன் சுரேஷ் கோபி, லைலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படம்தான் அஜித்தை ஆக்‌ஷன் படங்களில் அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி சென்றது. இதுவரை அஜித்தின் படங்களில் வந்த அவரது அறிமுக காட்சிகளில் தீனா படத்திற்கு எப்போதும் தனியிடம் உண்டு.

Sivakarthikeyan AR Murugadoss SK 23

டாப் இயக்குநர்: முதல் படம் மெகா ஹிட்டான பிறகு விஜயகாந்த்தை வைத்து ரமணா படத்தை இயக்கினார். முதல் படத்தில் கமர்ஷியலாக களமிறங்கிய முருகதாஸ் இரண்டாவது படத்தில் சமூக அக்கறையுடன் களமிறங்கினார். லஞ்சத்திற்கு எதிராக போராடும் ஒரு பேராசிரியரை வைத்து கோலிவுட்டை கலக்கினார் முருகதாஸ். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. குறிப்பாக அதுவரை ஆக்‌ஷன் ஹீரோவாகவே வலம் வந்த விஜயகாந்த் அந்தப் படத்தில் பக்குவமாக அடக்கி வாசித்திருப்பார்.

முருகதாஸின் கஜினி: முதல் இரண்டு படங்களுமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதால் முன்னணி இயக்குநராக மாறிவிட்டார் முருகதாஸ். தொடர்ந்து சூர்யாவை வைத்து அவர் இயக்கிய கஜினி படமும் மெகா ஹிட்டாக அந்தப் படம் ஹிந்தியில் ரீமேக்கானது. அமீர்கான் நடித்திருந்த கஜினி ஹிந்தி ரீமேக்கையும் முருகதாஸே இயக்கினார். பாலிவுட்டிலும் கஜினி ஹிட்டடிக்க இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவராக மாறிவிட்டார் முருகதாஸ். தொடர்ந்து அவர் தமிழில் இயக்கிய ஏழாம் அறிவு படமும் ஹிட்டானது.

துப்பாக்கி, கத்தி: விஜய் தொடர் தோல்விகளில் துவண்டிருந்தபோது அவருக்கு பக்கா கமர்ஷியல் ஹிட் கொடுத்தது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி. அதுவரை விஜய்யை யாரும் அவ்வளவு ஸ்டைலிஷாக பார்த்ததில்லை என்ற பெயரை துப்பாக்கி பெற்றுக்கொடுத்தது. அதேபோல் விஜய்யுடன் இரண்டாவது முறை இணைந்த கத்தி படமும் மெகா ஹிட்டாக; மூன்றாவதாக இணைந்த சர்கார் அடிவாங்கியது. தொடர்ந்து முருகதாஸ் இயக்கும் படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றன. அதில் ரஜினியின் தர்பாரும் அடக்கம்.

அடுத்த படம்: ஏ.ஆர்.முருகதாஸ் இப்போது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே முருகதாஸ் ஒரு ஹிட் கொடுக்க முடியாமல் திணறிவருகிறார். முக்கியமாக ஒருகாலத்தில் எப்படிப்பட்ட இயக்குநராக இருந்தவர் இப்போது இப்படி தடுமாறிக்கொண்டிருக்கிறாரே என்று அவர் மீது ரசிகர்கள் பரிதாப பார்வையையும் வீச ஆரம்பித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலீஸ் தேதி: படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமெடுத்துள்ளன. கண்டிப்பாக இந்தப் படத்தின் மூலம் தரமான கம்பேக்கை கொடுத்து தான் யார் என்பதை நிரூபிக்க முருகதாஸ் முனைப்பாக இருக்கிறார். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படமானது அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. அடுத்த பொங்கலுக்குத்தான் அஜித்தின் குட் பேட் அக்லியும் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X