Theri vs Thaai Kizhavi Box Office: விஜய் விவாகரத்து எதிரொலி காரணமா?.. தெறியை திணறடித்த தாய் கிழவி வசூல்!

சென்னை: ஜனவரி மாதமே நடிகர் விஜய்யின் தெறி படத்தை ரீ ரிலீஸ் செய்ய தாணு நினைத்த நிலையில் பல தயாரிப்பாளர்கள் தெறி ரீ ரிலீஸை தள்ளிப்போட சொன்னதும் அதற்கு சம்மதம் தெரிவித்து இந்த மாதம் தெறி ரீ ரிலீஸை தாணு செய்தார்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடித்த தாய் கிழவி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த வாரம் வெளியான படங்களிலேயே தாய் கிழவி தான் அதிக வசூலை ஈட்டியுள்ளது. சரத்குமாரின் ஆழி, ஆரி அர்ஜுனனின் ஃபோர்த் ஃப்ளோர் உள்ளிட்ட படங்கள் பெரிதாக வசூல் செய்யவில்லை.

Sivakarthikeyan s Thaai Kizhavi beats Vijay s Theri movie at Box Office
Photo Credit:

சச்சின் படத்தை போல தெறி ரீ ரிலீஸ் படமும் பெரியளவுக்கு வசூல் வேட்டை நடத்தும் என தாணு ரொம்பவே நம்பிக்கையுடன் இருந்த நிலையில், விஜய் படத்தை தியேட்டருக்குச் சென்று அதிகளவில் ரசிகர்கள் கொண்டாடவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் விவாகரத்து எதிரொலி: நடிகர் விஜய் தவெக தலைவராக மாறியுள்ள நிலையில், விரைவில் சட்டமன்ற தேர்தலையும் சந்திக்கவுள்ளார். இந்நிலையில், திடீரென விஜய்யின் மனைவி சங்கீதா தொடர்ந்துள்ள விவாகரத்து வழக்கு தொடர்பான தகவல்கள் கசிந்த நிலையில், பல விஜய் ரசிகைகளே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் எதிரொலி காரணமாகவே தெறி ரீ ரிலீஸ் கொண்டாட்டமும் முடங்கி விட்டதா என கேள்விகள் கிளம்பி உள்ளன.

தெறி ரீ ரிலீஸ் 2 நாள் வசூல்: விஜய்யின் கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆன நிலையில், அந்த படமும் 3 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், தெறி திரைப்படம் முதல் நாளில் வெறும் 40 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளது எனக் கூறப்பட்ட நிலையில், 2வது நாளான சனிக்கிழமை அதன் வசூல் மேலும், குறைந்து வெறும் 30 லட்சம் மட்டுமே வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை 70 லட்சம் வரை தெறி ரீ ரிலீஸ் வசூல் செய்திருக்கும் என்கின்றனர். ஞாயிற்றுக்கிழமையான இன்று வசூல் அதிகரிக்குமா அல்லது குறையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வசூல் தாண்டவம் ஆடும் தாய் கிழவி: சரத்குமாரின் ஆழி படம் முதல் நாளில் 1 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளதாக சாக்னிக் தகவல் தெரிவித்துள்ளது. ஆரி அர்ஜுனனின் ஃபோர்த் ஃப்ளோர் திரைப்படம் 18 லட்சம் வசூல் செய்துள்ளது. இந்நிலையில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார், சிங்கம்புலி, அருள்தாஸ், பால சரவணன், இளவரசு, முனிஷ்காந்த், ரேச்சல் ரெபேக்கா உள்ளிட்ட பலர் நடித்த தாய் கிழவி திரைப்படம் முதல் நாளில் 2.65 கோடி வசூல் செய்த நிலையில், 2வது நாளில் ஒரே ஜம்ப்பாக 4.65 கோடி வசூல் செய்துள்ளது. மொத்தம் 2 நாட்களில் இந்தியாவில் மட்டும் 7.30 கோடி ரூபாய் வசூலும் உலகளவில் 8.40 கோடி வசூலும் ஈட்டி பிளாக்பஸ்டர் ஆகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X