பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம்... சிவகுமார், சூர்யாவைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் உதவி
சென்னை: பெப்சி அமைப்பு விடுத்த கோரிக்கையை ஏற்று சினிமா தொழிலாளர்களுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சத்தை வழங்கி உள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ். பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியா முழுவதும் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டி.வி.சீரியல்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த ரத்து காரணமாக, இந்தியா முழுவதும் சினிமா தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சினிமாவில் தினசரி ஊதியம் பெற்று வாழ்க்கை நடத்தும் ஊழியர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும் என்று நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், அனைத்து தொலைக்காட்சி நிறுவன உரிமையாளர்களுக்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி குடும்பத்தினர் ரூ.10 லட்சம் ரூபாயை, பெப்சி அமைப்புக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் ரூ.10 லட்சத்தை பெப்சிக்கு வழங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











