செல்போனை தட்டிவிட்டதற்கு உளமாற வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்: சிவகுமார்
Recommended Video

சென்னை: ரசிகரின் செல்போனை தட்டிவிட்டதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார் சிவகுமார்.
மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிவகுமார் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை தட்டிவிட்டார். இதை பார்த்த நெட்டிசன்கள் கொந்தளித்து சிவகுமார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றனர்.
செல்போன் சம்பவம் குறித்து சிவகுமார் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் மன்னிப்பும் கேட்டுள்ளார்.
[சிவகுமார் விளக்கம் கொடுத்தாலும் விடாமல் துரத்தும் மீம்ஸ்.. இதை பாருங்க]
வீடியோ
ஆர்வம் மிக்க ரசிகர்கள் கட்டுக்கடங்காத கூட்டத்தில் அப்படித்தான் உணர்ச்சிவசப்பட்டு நடந்து கொள்வார்கள். ஒரு பிரபல கலைஞன் அதை எல்லாம் பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டும். என்ன இருந்தாலும் சிவகுமார் செல்போனை தட்டிவிட்டது தவறு என்று பெருவாரியான மக்கள் நினைக்கும் பட்சத்தில் என் செயலுக்காக நான் உளமாற வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். ஐ ஆம் வெரி சாரி என்று தெரிவித்துள்ளார் சிவகுமார்.
சிவகுமார்
தான் செய்த காரியத்திற்காக சிவகுமார் மன்னிப்பு கேட்டதை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டியுள்ளனர்.
செல்ஃபி
செல்பிகளால் தானே சிலசமயம் உயிரேபோகுது
அதை நினைச்சி தட்டிவிட்டுருப்பாரோ
#சிவகுமார்
சாரி
சிவகுமாரை விமர்சித்தவர்கள் அவர் மன்னிப்பு கேட்டதை பார்த்து பாராட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











