வீட்டு வேலைக்காரர் திருமணத்தில் குடும்பத்தோடு கலந்துகொண்ட சூர்யா, கார்த்தி, சிவகுமார்!
சென்னை: நடிகர் சிவகுமார் அவரது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்திக்கு மட்டுமல்லாமல் பலருக்கும் ரோல்மாடலாக இருந்து வருபவர். திரையுலகில் பலருக்கும் முன்மாதிரிக் கலைஞர்.
கலையுலக மார்க்கண்டேயன் என அழைக்கப்படும் சிவகுமார் தனது நல்ல குணங்களின் மூலம் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டவர். இவரைப் பற்றி பல நல்ல விஷயங்கள் இவரிடம் நெருக்கமானவர்கள் மூலம் அவ்வப்போது வெளியாகும்.

சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் பங்கேற்கும் ஒவ்வொரு மேடைகளிலும், சிவகுமாரை பற்றி யாராவது நல்ல விஷயங்களை மேற்கோள் காட்டுவார்கள். அவரைப் போலவே அவரது மகன்களும் திரையுலகிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் விளங்குவதாக பெருமையாகக் கூறுவார்கள்.
இந்நிலையில், தற்போது ஒரு நெகிழ்ச்சியான தருணம் நிகழ்ந்துள்ளது. சிவகுமார் வீட்டில் பல ஆண்டுகளாக வேலை செய்து வருபவர்கள் முருகன், கோவிந்தம்மாள். இவர்களது திருமணம் இன்று திருப்பதியில் நடைபெற்றிருக்கிறது.
இந்தத் திருமணத்தை நடத்திவைப்பதோடு திருமண விழாவில் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் தங்கள் குடும்பத்தினர் சகிதமாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வெளியானதும் ரசிகர்கள் அதிகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











