சர்ப்ரைஸாக வெளிநாட்டுக்கு பறந்த சிவகுமார் குடும்பம்
சென்னை: நடிகர் சிவகுமாரின் குடும்பம் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒரு சர்ப்ரைஸ் பயணம் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் என்ன ஒரு ட்விஸ்ட் என்றால், நடிகர் சிவகுமார், அவரது மனைவி, நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி மற்றும் சிவகுமாரின் மகள் பிருந்தா ஆகிய ஐவர் மட்டுமே இந்த வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சர்ச்சைகளில் சிக்கி படாத பாடுபட்ட நிலையில் தற்போது ரிலாக்ஸ் மூடுக்கு மாற இந்த வெளிநாடு பயணத்திற்கு சென்றுள்ளனர்.
நடிகர் சிவகுமார் பற்றியும் அவரது பன்முகத் திறமைகளை பற்றியும் அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன. ஆம் அந்த நடிப்பு சக்கரவர்த்தியின் இரண்டு இளவரசர்களும் ஊர் அறிந்த திறமைசாலிகளே என்பதில் ஏதாவது சந்தேகம் இருக்கிறதா என்ன.

முன்னர் தந்தை திரையுலகை கலக்கினார். இன்றோ மகன்கள், மருமகள் என குடும்பமே கலைக் குடும்பமாக ஜொலிக்கிறது. தற்போது சூர்யா, ஜோதிகா, கார்த்தி என அனைவருமே படு பிஸியாக அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள்.
சில தினங்களுக்கு முன்னர் சூர்யா நடித்த காப்பான் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு புறம் பாசிட்டிவான விமர்சனங்கள் மற்றுமொரு பக்கம், படம் பற்றின நெகட்டிவான கமெண்ட்ஸ் என்ன கலவையாய் விமர்சனங்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
சூர்யாவின் நிலைமை இப்படி என்றால் கார்த்தியின் படமோ வேறு மாதிரி சர்ச்சையில் சிக்கி இப்போது தான் அதிலிருந்து வெளிவந்து இருக்கிறது. பாக்கியராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் திரைப்படம் தான் சுல்தான். இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று கொண்டிருக்கும் போது சில சர்ச்சைகள் ஏற்பட்டு படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது தான் அது சம்பந்தமான சிக்கல்கள் சரியாகி வருகின்றன.

சிவகுமாரும் சர்ச்சைகளில் சிக்காமலில்லை. அவர் இந்து மதத்திற்கு எதிரானவர் என்ற சர்ச்சையை கிளப்ப அதற்கு சிவகுமாரே, அவரின் விளக்கத்தை மிக நீளமாக அளித்து இந்த சர்ச்சையில் இருந்து விடுபட்டார்.
குதூகலமாய் இருந்த குடும்பம் பல சர்ச்சைகளில் சிக்கி ஒரு வார காலமாக படாத பாடுபட்டு வந்திருந்த நிலையில், நடிகர் சிவகுமாரின் குடும்பம் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒரு சர்ப்ரைஸ் பயணம் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் என்ன ஒரு ட்விஸ்ட் என்றால், நடிகர் சிவகுமார், அவரது மனைவி, நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி மற்றும் சிவகுமாரின் மகள் பிருந்தா ஆகிய ஐவர் மட்டுமே இந்த வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
ஜோதிகா மற்றும் சூர்யாவின் மகன், மகள், கார்த்தியின் மனைவி ரஞ்சனி, மகள், பிருந்தாவின் கணவர் மற்றும் அவரது குழந்தைகள் என இவர்கள் யாரும் பயணத்தில் உடன் செல்லவில்லை என்பது தான் ஆச்சரியம்.
பள்ளி விடுமுறையை அடிப்படையாக வைத்து இந்த 10 நாட்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தாலும் ஏன் ஜோதிகாவும் அவருடைய வாரிசுகளும் உடன் செல்லவில்லை என்பது தெரியவில்லை. மேலும் முழுக்க முழுக்க சிவகுமாரின் ரத்த சம்பந்த உறவுகள் மட்டும் எந்த நாட்டுக்கு சென்றுள்ளார்கள் அதன் காரணம் என்ன என்பதெல்லாம் புரியாத புதிராக வைத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications