சூர்யா - ஜோதிகா காதல்.. இந்த அயோக்கிய பொண்ணுதான் காரணம்.. ராதிகாவை சிவகுமார் இப்படி சொல்லிட்டாரே?
சென்னை: கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடிகளில் ஒன்றாக வலம் வருபவர்கள் சூர்யா - ஜோதிகா. காதலித்து திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தால் இவர்கள் மாதிரித்தான் வாழ வேண்டும் என்று பலர் சொல்லும் அளவுக்கு அவர்கள் வாழ்ந்துவருகிறார்கள். ஆனால் இவர்களது காதலுக்கு முதலில் சூர்யாவின் தந்தை சிவகுமார் சம்மதம் தெரிவிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்தது. இந்நிலையில் சிவகுமார் சமீபத்தில் சொல்லியிருக்கும் விஷயம் மீண்டும் இணையத்தில் விவாதமாகியிருக்கிறது.
சூர்யாவும், ஜோதிகாவும் தங்களது கரியரின் ஆரம்பத்திலேயே காதலிக்க தொடங்கிவிட்டார்கள். ஆனால் இந்தக் காதலுக்கு சூர்யாவின் வீட்டில் ஆரம்பத்தில் சம்மதம் கிடைக்கவில்லை. இருந்தாலும் திருமணம் செய்தால் ஜோதிகாவை திருமணம் செய்துகொள்கிறேன். இல்லையென்றால் தனியாகவே இருந்துகொள்கிறேன் என்று சூர்யா சொல்ல; மகனின் காதலை எதை கொண்டும் தகர்க்க முடியாது என்பதை சிவகுமார் உணர்ந்துகொண்டார். அதற்கு பிறகுதான் இரண்டு பேருக்கும் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஜோடி: திருமணத்துக்கு பிறகு சூர்யா - ஜோதிகா எல்லோருடைய ஃபேவரைட் ஜோடியாக மாறிவிட்டார்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பது, துணையாக நிற்பது என கணவனும், மனைவியும் எப்படி இருக்க வேண்டும் என்பது உதாரணமாகவும் திகழ்கிறார்கள். அஜித் - ஷாலினிக்கு பிறகு அனைவரும் விரும்பும் ஜோடி என்றால் அது இவர்கள்தான். அவர்களுக்கு ஒரு மகளும், மகனும் இருக்கிறார்கள். அவர்களையும் பக்குவமாகவும், சிறப்பாகவும் வளர்த்துவருகிறார்கள்.

மீண்டும் சினிமாவில்: திருமணம் செய்த கையோடு சினிமாவிலிருந்து ஒதுங்கினார் ஜோதிகா. பிள்ளைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்திய அவர்; அவர்கள் வளர்ந்த பிறகு மீண்டும் சினிமாவுக்கு வந்துவிட்டார். இந்த முறை கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அதுமட்டுமின்றி ஹிந்தியில்தான் அவரது கவனம் முழுவதும் இருக்கிறது. தான் மட்டுமின்றி தன்னுடைய கணவர் சூர்யாவையும் பாலிவுட் பக்கம் கவனத்தை செலுத்த வைத்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ராதிகாவும், சிவக்குமாரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.
ராதிகா சொன்னது: அப்போது பேசிய ராதிகா, 'உயிரிலே கலந்தது படத்தின் ஷூட்டிங்கில் சூர்யா ரொம்பவே அமைதியாக இருப்பார். நான் அவரிடம், இப்படியெல்லாம் இருக்கக்கூடாது சூர்யா. நன்றாக சிரி, பேசு என சொல்வேன். ஜோதிகாவோ ஒரு மூலையில் அமர்ந்திருப்பார். நான் சூர்யாவிடம், 'போ சூர்யா. ஜோடிகாவிடம் போய் பேசு' என சொல்வேன்" என்றார். இதை கேட்ட சிவகுமாரோ, 'பார்த்தீங்களா ஜோதிகாவையும், சூர்யாவையும் சேர்ந்ததற்கு இந்த அயோக்கிய பொண்ணுதான் காரணம். இப்போ அவங்க இரண்டு பேரும் சேர்ந்து இரண்டு பிள்ளைகளை பெற்றுவிட்டார்கள்' என்றார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் சொன்னது: அவரைத் தொடர்ந்து பேசிய ராதிகா, 'நானும் சிவகுமாரும் சேர்ந்து சீரியல் செய்தோம். அப்போது ஷூட்டிங் கேப்பில் இவரிடம், 'அண்ணா விடுங்க அண்ணா லவ் பண்றாங்க. கல்யாணம் பண்ணிக்கட்டுமே' என சொல்வேன். இவரோ அதெல்லாம் ஒத்து வராது என்று சொல்வார். இடை இடையே சூர்யா வேறு எனக்கு ஃபோன் செய்து, 'அப்பா என்ன சொல்றாரு அக்கா' என கேட்டுக்கொண்டே இருப்பார்" என்றார். சிவகுமாரும், ராதிகாவும் பேசிய இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











