மூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன்.. எஸ்பிபி மறைவுக்கு சிவகுமார் உருக்கம்!

By

சென்னை: என்னிடம் பாட வா என எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை இறைவன் அழைத்துக் கொண்டான் என்று நடிகர் சிவகுமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று மரணமடைந்தார். அவர் மரணம் சினிமா துறையினரை ஒட்டுமொத்தமாக சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவர்கள் தங்கள் இரங்கலை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா அறிகுறி

கொரோனா அறிகுறி

குடியரசு தலைவர், பிரதமர் மோடி, அமைச்சர்களில் இருந்து பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா அறிகுறி என்று அனுமதிக்கப்பட்டார் எஸ்.பி.பால சுப்ரமணியம். பின்னர் அவர் உடல் நிலை மோசமானதால்,அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

கூட்டு பிரார்த்தனை

கூட்டு பிரார்த்தனை

செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை பெற்றும் சிகிச்சை அளித்தனர். அவர் குணமடைய ரசிகர்கள், திரையுலகினர் கூட்டு பிரார்த்தனை செய்தனர். பிறகு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

காலமானார்

காலமானார்

கடந்த 51 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை திடீரென நேற்று மோசமானது. அவர் இன்று காலமானார். அவருக்கு வயது 74. இது ஒட்டு மொத்த திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவர் மறைவை அடுத்து சமூக வலைதளங்களில் தங்கள் இரங்கல் குவிந்து வருகிறது.

சிவகுமார் இரங்கல்

சிவகுமார் இரங்கல்

இந்நிலையில் எஸ்.பி.பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, உருக்கமான செய்தி அனுப்பிய சிவகுமார், இப்போது வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப் பதாவது: அரை நூற்றாண்டுக்கும் மேலாக எத்தனை ஆயிரம் பாடல்களை, எத்தனை மொழிகளில் பாடிய
உன்னதக் கலைஞன். மூச்சுக் காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன்.

அழைத்துக் கொண்டான்

அழைத்துக் கொண்டான்

இமயத்தின் உச்சம் தொட்டும் பணிவின் வடிவமாக, பண்பின் சிகரமாக, இறுதி உரையிலும்வெளிப்படுத்தியவன். இதுவரை மக்களுக்குப்
பாடியது போதும் இனி என்னிடம் பாட வா என்று இறைவன் அழைத்துக் கொண்டான். போய் வா தம்பி. இவ்வாறு நடிகர் சிவகுமார் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X